நித்தியக்கடன் அக்டோபர் 28 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 28


🏮🎨🏮🎨🏮🎨🏮🎨🏮🎨🏮


🥏 இன்றைய நித்தியக்கடன்


🥏 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🥏 இன்றைய சாதகம் 


🥏 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🥏 இன்றைய நற்சிந்தனை 


🥏 புற காரணிகளையும், அக காரணிகளையும் ஒன்றுபடுத்தி அதனுடைய உட்தன்மைகளை ஆராய்த்து, புரிந்து கொண்டு விட்டால் அது தான் ஞானம். உங்கள் வாழ்க்கையை தீர்மானிப்பது இந்த காரணிகள்தான். காரணிகளை அலட்சியம் செய்யாதீர்கள், எதிர்கால வாழ்க்கையை இந்த காரணிகளே உருவாக்குகிறது.

இந்த பிரபஞ்சத்தில் எந்த ஒன்று நிகழ்ந்தாலும் அதற்கான சரியான காரணி நிச்சயமாக இருக்கும். மனித வாழ்க்கையில் இந்த காரணிகள் நிலையானதாகவும் நிலையற்றதாக இருந்து சரியாக நம்மை வழி நடத்துகிறது.


🥏 இன்றைய தற்சோதனன


🥏 ஒவ்வொரு விதையும் முளைப்பதற்கு முயற்சி செய்கிறது. விதைக்குள் இருக்கின்ற ஆற்றல் சரியான ஒரு  புறச்சூழ்லை எதிர்நோக்கி காத்திருக்கிறது இந்த முயற்சிக்கு இயற்கை என்ற பேராற்றல் பேருதவியாக அமைகிறது, இதனை இடைமறித்து தடுத்து தடம் மாற்றி தடுமாறச் செய்து கொண்டிருப்பது எல்லாம் நம்முடைய பழக்க வழக்கம் மட்டும் தான். இதனை ஒழுங்குபடுத்தி மாற்றியமைப்பதற்கு நமக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிதான் தவமும் தற்சோதனையும். நமக்குள் இருக்கும் ஞானம் என்னும் விதையை வளர்ப்பதற்கு "உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை" என்ற இயற்கை உரத்தை பயன்படுத்துவோம்.


🥏 இன்றைய பண்புப்பயிற்சி


🥏 மனதிற்கு பல்வேறு முகங்கள் உண்டு மனதை பயன்படுத்தி எதை வேண்டுமானாலும், நீங்கள் உங்களுடையதாக மாற்றிக் கொள்ளலாம். மனதை பண்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டால், அது காற்றாற்று வெள்ளம் போல அனைத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்துவிடும். அதில்தான் நீங்கள் வாழ வேண்டும் என்று கட்டாயப் படுத்தும், நிர்ப்பந்தப் படுத்தும். இது நாள் வரை நீங்கள் இம்முறையில் தான், வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். மனதை நீங்களாக முறைப்படுத்தினால் அதை ஞானத்திற்கு உயர்த்தலாம். மனதை சிறந்த முறையில் பக்குவப் படுத்திக் கொள்ளுங்கள். பக்குவப்பட்ட மனதில் தான் ஞானஅறிவு  பெருகும். வாழ்க வளமுடன்...


🥏 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🥏 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments