வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 26
🕳️🔥🕳️🔥🕳️🔥🕳️🔥🕳️🔥🕳️
🏝️ இன்றைய நித்தியக்கடன்
🏝️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🏝️ இன்றைய சாதகம்
🏝️ சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🏝️ இன்றைய நற்சிந்தனை
🏝️ நம்முடைய பொறி புலன்களை எதற்கெல்லாம் அடிக்கடி பயன்படுத்துகிறோமோ, நாம் அதுவாக மாறிவிடுவோம் இது இயற்கையின் நீதி. நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலை காரணமாக பொறி புலன்களை பயன்படுத்தினாலும் இந்த நீதி மாறாது. இதுபோன்று பல்வேறு விதமான நீதி இயற்கையில் இருக்கிறது. இவைகளை எல்லாம் சரியாக புரிந்து கொண்டு அந்த இறை சட்ட திட்டத்திற்கு, ஏற்றவாறு நம்முடைய செயல்களை ஒழுங்கு படுத்திக் கொள்வதே துன்பமில்லா வாழ்க்கையாகும்.
🏝️ இன்றைய தற்சோதனன
🏝️ மறைமுகமாகவும், நேரடியாகவும் இந்த நீதி இயல்பாகவே இயங்கும் ஆற்றலும், திறமையும் உடையது. இந்த நீதியை புரிந்து கொள்வதற்கு மனதை எப்போதும் தற்சோதனையில் வைத்து அமைதியோடு பொறி புலன்களை பயன்படுத்தி வாழ வேண்டும். வாழ்க்கை இறைநீதியின்படி நடைபெறுகிறது. கருமைய தன்மைக்கு ஒத்து இயங்குகிறது. இந்த உண்மையை உயிரோடு இருந்து சிந்தித்து ஏற்றுக் கொள்வோம்.
🏝️ இன்றைய பண்புப்பயிற்சி
🏝️ கடந்து சென்று கொண்டிருக்கும் சூழ்நிலைகள் நமக்கு சில தகவல்கள் இருக்கிறது. நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கும் சூழ்நிலைக்குள் நமக்கு ஒரு செய்தி இருக்கிறது. கடந்தகால அனுபவத்தோடு, எதிர்கால திட்டத்தோடு, நிகழ்காலத்தில் நிலையான இறை நீதியை உணர்ந்து செயலாற்றி இன்பம் காண்போம். திட்டமிட்டு வாழும் பண்பில் நாம் சிறந்து விளங்க வேண்டும். வாழ்க்கைக் கடமைகளை அப்போதுதான் நிறைவாக செய்து மனநிறைவு பெற முடியும். வாழ்க வளமுடன்...
🏝️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏝️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment