நித்தியக்கடன் டிசம்பர் 25 2024

 ♨️🧩♨️🧩♨️🧩♨️🧩♨️🧩♨️


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*டிசம்பர் 25*


♨️🧩♨️🧩♨️🧩♨️🧩♨️🧩♨️


🍥 *இன்றைய நித்தியக்கடன்*


🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍥 *இன்றைய சாதகம்* 


🍥 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🍥 *இன்றைய நற்சிந்தனை* 


🍥 சுழற்சிமுறையில் மனிதர்களுடைய வாழ்க்கை முறை அமைக்கப்பட்டிருக்கிறது. எப்படி என்றால் 24 மணி நேரத்தில் பாதி 12 மணிநேரம் நன்மைக்கும் மீதம் தீமைக்கும், 12 மணி நேரத்தில் பாதி 6 மணிநேரம் நன்மைக்கும் மீதம் தீமைக்கும் என்று ஒரு நோடிப் பொழுதில் பாதி நன்மைக்கும் பாதி தீமைக்கும் பங்கிடப்படிகிறது. நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சிலபல நிகழ்ச்சிகளை நீங்கள் சந்தித்து தானாக வேண்டும். இதில் ஒரு விதிவிலக்கு என்னவென்றால் தற்போது உங்களுடைய பண்பு, நடத்தை இவைகளை பொருத்து உங்களுக்கான எதிர்கால வாழ்க்கை அமைப்பில் சுழற்சிமுறையில் நன்மையும், தீமையும் வந்து அமைகின்றன. 


🍥 *இன்றைய தற்சோதனன*


🍥 உங்களை சுற்றியுள்ள மற்றவர்களுக்கும் உங்களுக்குமான இணக்க தன்மை, விருப்பு, வெறுப்பு, பகை, நட்பு, அறிவு, மற்றும் அவரவர்கள் அவரவர்களுக்கு செய்து கொள்ளும் நன்மைகள், தீமைகள் இந்த சுழற்சி முறை வாழ்க்கையில் முக்கியமாக கவனிக்கப்படுகிறது. இதனை பொறுத்துதான் உங்கள் வாழ்வில் எல்லா வளங்களும், வெற்றிகளும், மகிழ்ச்சியும் தீர்மானிக்கப்படுகிறது. ஆகவே நன்றாக தற்சோதனை செய்து உங்களுக்கும், பிறருக்குமான உறவு முறையை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும்.


🍥 *இன்றைய பண்புப்பயிற்சி*


🍥 அவர்களால் தான் நான் கோபப்பட்டேன்,அப்படி பேசிவிட்டேன், இப்படி நடந்து விட்டேன் என்பதெல்லாம் இறை நீதிப்படி இரண்டாவதாகவே கணக்கிடப்படும். முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள், என்ன பேசினீர்கள் என்பதை பொறுத்தே உங்கள் வாழ்க்கை தீர்மானிக்கப்படும், என்ற உண்மையை நன்றாக உணர்ந்து கொண்டு நல் உள்ளத்தோடு வாழும் பண்பில் உயர்வு பெறுங்கள். மற்ற எவரொருவரும் நம்முடைய வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை. அவரவர்களுடைய எண்ணம், சொல், செயல் அவரவர் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. வாழ்க வளமுடன்...       


🍥 *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🍥 *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments