வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
அக்டோபர் 22
🌞🍃🌞🍃🌞🍃🌞🍃🌞🍃🌞
⛳ இன்றைய நித்தியக்கடன்
⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
⛳ இன்றைய சாதகம்
⛳ செவ்வாய்கிழமை
காலை:- துரியாதீததவம்,
மாலை:- இறைநிலை தவம்.
⛳ இன்றைய நற்சிந்தனை
⛳ ஒவ்வொரு மனிதர்களுடைய கருமையமும் தனித்தனியாகவும், சுயமாகவும் ஒன்றிணைந்து, பொதுவாகவும் இயங்க கூடியவையாகும். இந்த வார்த்தைகள் உங்களை சற்று குழப்பும் படியாக இருக்கலாம், ஆனால் அவைகள் அப்படித்தான் இயங்குகிறது. இயற்கை அவைகளை அப்படித்தான் வழிநடத்தி இயக்கிக் கொண்டிருக்கிறது. மிகவும் பிரம்மாண்டமானதும் கருமையமே சாதாரணமானதும் கருமையமே. ஒருவருடைய கடமையையும், பொறுப்பையும் ஏற்று பின்பற்றி இன்னொருவர் தொடர்ந்து செய்வதற்கும் அந்த கருமையத்தின் அமைப்புகள், கோட்பாடுகள் பொருந்த வேண்டும்.
⛳ இன்றைய தற்சோதனன
⛳ கருமையத்தில் இருக்க கூடிய தன்மையையும், தரத்தையும், அடிப்படையாக கொண்டுதான் ஒவ்வொரு தனி மனிதனுடைய வாழ்க்கையும், அவர்கள் வாழ்க்கையில் வந்துசேர வேண்டியவைகளும், விலகிச்செல்ல வேண்டியவைகளையும் முடிவு செய்கிறது. இவை அனைத்தையும் தாண்டி ஆன்மீக தேடல் என்பதும் வாழ்க்கை என்பதும் கருமையத்தில் இருந்தே துவங்குகிறது. அமைதியாக ஆரம்பமாகி, ஆர்ப்பாட்டம் இல்லாமல் நகர்ந்து, விரிந்து, பரந்த பிரபஞ்சத்தில் நிறைவு பெறக்கூடிய ஒரு முழுமையான பயணம், இந்த ஆன்மீகப்பயணம்...
⛳ இன்றைய பண்புப்பயிற்சி
⛳ ஏன்? எதற்கு? எதனால்? எப்படி என்ற கேள்வியோடும், தேடலோடும் இந்த பயணம் இனிதே துவங்கும். அவரவர்களுடைய தனி முயற்சிக்கும் தன்னார்வத்துக்கும் ஏற்ப, கருமையத்திற்குள் உள்ளடக்கமாக இருக்கும் இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் அனைத்தும் அவரவர்களுடைய எண்ணமாகவும், அனுபவமாகவும் படிப்படியாக மலரும். அவசரமோ மிகுந்த அளவு மீறிய எதிர்பார்ப்போ இல்லாமல் எதார்த்தமாகவும் இந்த பயணத்தில் நம்மை இனிதே இணைத்துக்கொள்ள வேண்டும். எது நடந்தாலும் எப்படி நடந்தாலும் அது என்னுடைய கருமையத்தில் இருக்கும், தன்மையின் விளைவு என்பதை உணர்ந்து இந்த உண்மையை ஏற்றுக்கொண்டு, அப்பண்பில் உயர்ந்து நின்று இப்பயணத்தை இனிதே துவங்குவோம். நாமும் நம் குடும்பமும் வாழ்க வளமுடன்...
⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment