நித்தியக்கடன் டிசம்பர் 21 2024

 🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁


*வாழ்க வையகம்*

*வளர்க வேதாத்திரியம்*

*வாழ்க வளமுடன்*

*நித்தியக்கடன்*

*டிசம்பர் 21*


🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁


🕸️ *இன்றைய நித்தியக்கடன்*


🕸️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🕸️ *இன்றைய சாதகம்* 


🕸️ சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.


🕸️ *இன்றைய நற்சிந்தனை* 


🕸️ உப்புத்தண்ணீரை பயன்படுத்தும் பாத்திரங்களில் ஒரு விதமான படிமம் படிந்திருக்கும். அதுவே நல்ல தண்ணிரை பயன்படுத்தும் போது அந்தப் படிமம் ஏற்படாது. இதுபோன்றே நம் மனதில் எது மாதிரியான எண்ணங்களை உலாவ விடுகிறோமோ அதற்கு தக்கவாறு நம் உயிரில் சில படிமங்கள் ஏற்படுகின்றன.


🕸️ *இன்றைய தற்சோதனன*


🕸️ அப்படிமத்திற்கு நல்வினை பதிவென்றும் தீவினை பதிவென்றும் என்றும் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். நல்வினை பதிவினால் நாளுக்கு நாள் நமக்கு நன்மையும், வாழ்க்கை மகிழ்ச்சியோடும், மனநிறைவோடும் வாழ முடிகிறது. தீவினை பதிவால் உடலில் நோயும், மனதில் குழப்பமும், வாழ்க்கையில் சிக்கல்களும் உருவாகின்றன. தீவினை பதிவை ஏற்படுத்திக் கொள்ளாமல் இனியாவது தற்சோதனை செய்து நம் எண்ணம், சொல், செயல் மூன்றையும் ஒழுங்கு செய்வோம்.


🕸️ *இன்றைய பண்புப்பயிற்சி*


🕸️ உயிரின் மீது ஏற்பட்டிருக்கும் தீய படிமங்களை அகற்றிக்கொள்ளவும், நல்ல படிமங்களை ஏற்படுத்திக் கொள்ளவும் நம்மால் முடியும். மனதை பண்படுத்தி வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் பக்குவமாக நடந்து கொள்ளும் போது மட்டும் மனம் பண்படைகிறது. மனதை பண்படுத்தவும், பக்குவப்படுத்தவும் இரண்டொழுக்கப் பண்பாட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க வளமுடன்...       


🕸️ *குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.*


🕸️ *“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      *🌸வாழ்க வையகம்🌸*

   *🍁வளர்க வேதாத்திரியம்🍁*

      *🌸வாழ்க வளமுடன்🌸*


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments