நித்தியக்கடன் நவம்பர் 18 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 18


🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁🕳️🍁


🔰 இன்றைய நித்தியக்கடன்


🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔰 இன்றைய சாதகம் 


🔰 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🔰 இன்றைய நற்சிந்தனை 


🔰 நான் பேசுவதும், செய்வதும், எண்ணுவதும் சரி என்று யோசிக்கும் அதேசமயம் நான் பேசுவதும், செய்வதும், எண்ணுவதும் தவறு என்றும் யோசித்துப் பாருங்கள். நமக்குள் இருக்கக்கூடிய பேருண்மையோடு சேர்வதற்கான வழிமுறைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வாறாக நம்மை நாமே கண்காணித்து கணக்கெடுத்துக் கொண்டு, எண்ணிலே இருக்கும் என்னை உணர்வதற்கு முழுமையாக, பொறுப்புடனும் அக்கறையுடனும் முயற்சி செய்ய வேண்டும்.


🔰 இன்றைய தற்சோதனன


🔰 நாம் வேகமாக சென்று கொண்டே இருக்கிறோம் நம்மை கவனிக்கத் தவறுகிறோம். இருந்துவிட்டு போகட்டும், நடந்தது நடந்து விட்டது, என்றெல்லாம் சிந்தித்து தட்டிக்கழிப் போமேயானால் நம்முடைய தனித்துவம் என்ன என்பது, நமக்கு என்றென்றும் புரியாத புதிராகவே இருந்து விடும். அவ்வாறாக நாம் வாழ்ந்து விட்டு போவதற்கு இப்பூமியில் இந்த மனித தோற்றத்தை பெறவில்லை என்பதை உணர்வோம். இருப்பது ஒன்றே ஒன்று தான், அந்த ஒன்றுடன் ஒன்றிக் கலக்க வேண்டும்.


🔰 இன்றைய பண்புப்பயிற்சி


🔰 ஒன்றிக் கலப்பதற்கு நமக்கு பல்வேறு வகையான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் முறையானதும் உண்டு, முறை அற்றதும் உண்டு. நாம் சரியானதை தேர்ந்தெடுத்து பயணம் செய்தாலும் கூட, நம்மை திசை திருப்ப நமக்குள்ளாகவே மாயை இருக்கிறது. அவற்றுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் மயங்கி விடாமல் உணர்தல், துய்த்தல், பிரித்துணர்தல் எனும் பண்புகளில் உயர்ந்து, மலர்ந்த அறிவோடு விழிப்பு நிலை கொண்டு அவைகளைக் கடந்து கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...   


🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments