நித்தியக்கடன் நவம்பர் 15 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 15


🪻🕳️🪻🕳️🪻🕳️🪻🕳️🪻🕳️🪻


🎨 இன்றைய நித்தியக்கடன்


🎨 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🎨 இன்றைய சாதகம் 


🎨 இன்று பௌர்ணமி காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம். 


🎨 இன்றைய நற்சிந்தனை 


🎨 பிரபஞ்சவெளியில் இருக்கக்கூடிய அனைத்தும் நம்முடைய உடலுக்குளாகவும் இருக்கிறது. இவைகளை எப்படி அனுபவமாக்கிக் கொள்வது என்றால்? இது ஒரு விஞ்ஞானம். இந்த விஞ்ஞானம் முரண்பாடாக இருக்கும் வரை, இதில் நமக்கு எந்த ஒரு அனுபவமும் கிட்டாது. இது எப்படி எனில் கண் தெரியாமல் ஒரு பொருளை தொட்டுப்பார்த்து, இது இன்னது தான் என்று விமர்சனம் செய்யும் போது, அது எந்த அளவு உண்மையாக இருக்குமோ அவ்வாறு தான் இருக்கும்.


🎨 இன்றைய தற்சோதனன


🎨 நம் உடலில் ஏழு ஆதாரங்கள் இருக்கிறது. அவை மூலாதாரம், சுவாதிஸ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுக்தி, ஆக்கினை, துரியம் இந்த ஏழு ஆதாரங்களோடு பிரபஞ்சத்தில் உள்ள ஏழு பொருள்களுக்கும் தன்மை, தரம், திறன், அறிவு, நுட்பம், இயங்கும்முறை யாவும் வேறுபாடாக உள்ளவரை இதற்கும் அதற்கும், ஒரு இணக்கத்தன்மை புரிதல் இவையாவும் நலமுற இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. இவைகள் சரியான அளவிலும் முறையிலும் இணைப்புப் பெற வேண்டுமானால், அதற்கு முறையான பயிற்சி தேவை பலமான தற்சோதனையும் தேவை.


🎨 இன்றைய பண்புப்பயிற்சி


🎨 உடலை பண்படுத்தி, உயிரை வலுப்படுத்தி, மனதைப் பண்படுத்தி உடலுக்குள் உள்ள ஏழு ஆதாரங்களுக்கும், பிரபஞ்சத்தில் உள்ள ஏழு ஆதாரங்களுக்கும் சரியானதொரு தன்மை, தரம், திறன், அறிவு, நுட்பம், இயங்கும் முறை அனைத்தையும் ஒரே விகிதாச்சாரத்தில் நிலை நிறுத்தி விட்டால் அந்த நிமிடம் முதல், பிரம்ம நிலை விளக்கம் இறைஞானம் அனுபவமாகும். இந்த விகிதாசாரத்தை சரியான முறையில் நிலை நிறுத்துவதற்காக உருவாக்கப்பட்டதே வேதாத்திரியம். ஞான செயலை செய்வோம் (உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை) செயல் விளைவு நீதியின்படி ஞான விளைவை அனுபவமாய் பெறுவோம். வாழ்க வளமுடன்... 


🎨 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎨 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments