வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 14
🔮🍥🔮🍥🔮🍥🔮🍥🔮🍥🔮
🧩 இன்றைய நித்தியக்கடன்
🧩 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🧩 இன்றைய சாதகம்
🧩 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🧩 இன்றைய நற்சிந்தனை
🧩 உயிருடலோடு சேர்ந்து செய்யும் காரியங்கள், உடலை விட்டு உயிராக இருந்து செய்யும் காரியங்கள் என்று இருவகை உண்டு. இது மனிதர்களுக்கு அவர்கள் கருமையத்திற்கு மட்டுமே அமைந்த (விதி) கோட்பாடு ஆகும். இந்த கோட்பாட்டை மன அலைச்சுழலை குறைத்துக்கொண்டு சிந்தித்தால் சரியாகப் புரியும் அதன்பின் அதனை பின்பற்றி செயல்படத் துவங்களாம்.
🧩 இன்றைய தற்சோதனன
🧩 நாம் உயிரை, உடலை பயன்படுத்தும் முறையில் நம்முடைய எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது. உயிருடலுக்கு ஒளி கூட்டுங்கள், ஒளி உடலாய் வாழத்தயாராகுங்கள். எவ்வாறு நாம் இந்தபூமியில் உடலும் உயிருமாய் இருந்து வாழ்கிறோமோ அதனைப் பொறுத்தே ஒளி தேகம் உருவாகும். தற்சோதனை தற்சோதனை இதற்கான சரியான இலக்கை உருவாக்கித் தரும்.
🧩 இன்றைய பண்புப்பயிற்சி
🧩 பேராசை, சினம், கடும்பற்று, முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை, வஞ்சம் இவைகள் அனைத்தும் விலங்கின பண்பாகும். இவைகளில் மனிதர்கள் வாழ்வது பாவமே ஆகும். இதைவிடுத்து மனிதன் வாழக்கூடிய பண்பு நிறைமனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இதுவே மனிதர்கள் வாழ வேண்டிய பண்பாகும். இந்தப் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து விளங்கும் கருமையமே, தன்னை இறை நிலையை நோக்கி நகர்த்தி கொள்ளும் வாழ்க வளமுடன்...
🧩 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🧩 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment