நித்தியக்கடன் நவம்பர் 11 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 11


🌐⚡🌐⚡🌐⚡🌐⚡🌐⚡🌐


🍁 இன்றைய நித்தியக்கடன்


🍁 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🍁 இன்றைய சாதகம் 


🍁 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🍁 இன்றைய நற்சிந்தனை 


🍁 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி மனித சரீரத்தில் தலைப்பகுதி தெற்குப் பகுதியாகவும், கால்பகுதி வடக்குப் பகுதியாகவும் அமைந்துள்ளதால் குண்டலினி யோகத்தில் மேல் நோக்கு தவம் இயற்று பவர்களை தென்புலத்தார் என்பார்கள். தென்னாடுடையசிவன் சிரசு பகுதியில் இருக்கும் இறைவன்.


🍁 இன்றைய தற்சோதனன


🍁 என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி, எந்தநோக்கம் உடையவருக்கும் இறைவனாய் இருப்பவன், நல்லோருக்கும் தீயோருக்கும் அவன் ஒருவனை இறைவனாவான். அங்கிங்கெனாதபடி இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பொருளாவான் இறைவன். இறைத் தன்மை வேறுபட்டு இருப்பதையும், மாறுபட்டு இயங்குவதையும் தற்சோதனை செய்து தெளிவு பெறுவோம்.


🍁 இன்றைய பண்புப்பயிற்சி


🍁 இறைவனே அனைத்துமாக தன்மாற்றம் பெற்றுள்ளான் என்பதை உணரவேண்டுமானால். நமக்குள் இணக்கத்தன்மை பெருக்கெடுக்க வேண்டும். மனம் பிளவுபட்ட தன்மையிலிருந்து ஒருங்கிணைப்பு பெற்று தனது சுயத்தன்மையில் இயங்க வேண்டும் எந்த ஒன்றோடும் எதிர்மறை தன்மை இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல் எல்லாவற்றோடும் இணைந்து இணக்கமாக வாழும் பண்பில் உயர வேண்டும் இணக்கத் தன்மை மிக, மிக அவசியம், இறைவனை உணர. வாழ்க வளமுடன்... 


🍁 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🍁 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments