வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 09
💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 எந்த ஒரு பொருளானாலும் அது சுழலும் போது அதை சுற்றி ஒரு விசை உருவாகும். உதாரணத்திற்கு ஒரு பம்பரத்தை சுழல விடுங்கள், சுழன்று கொண்டிருக்கும் போது அதன் மீது ஒரு துளி நீரை விட்டுப் பாருங்கள், நீர் அந்த பம்பரத்தின் மீது விழுமா என்றால் விழாது. அதே பம்பரம் நின்று விட்ட நிலையில் அதன் மீது ஒரு துளி நீரை விட்டால் தாராளமாக சிதறாமல் அதன் மீதே விழுந்து விடும். ஆக சுழலும் பொருளை சுற்றி ஒரு விசை உருவாகும்.
🎲 இன்றைய தற்சோதனன
🎲 நமக்குள்ளாக உயிர் சுழன்று ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த உயிராகபட்டது உடலை விட்டு வெளியே சென்று இப்பிரபஞ்சத் தோடு இணைந்து ஒன்றிக் கலந்து மீண்டும் உடலுக்கு வர வேண்டும். இது எவ்வாறு எனில் இந்த பிரபஞ்சத்தைப் பற்றி நம்முடைய கருத்து என்னவோ சிந்தனை என்னவோ அதற்கு தகுந்தவாறு, பிரபஞ்ச பொருள்களோடு அதன் எல்லை வரை சென்று இயங்கி மீண்டும் நம் உடலுக்குள் வரும். இதற்கு உடலில் உயிரானது முழு வலிமையோடு இருந்தால் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. மாறாக வலிமை குறைந்திருந்தால் வெளியே செல்வதுமில்லை... சென்றது திரும்பி வருவதுமில்லை.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 தவத்தையும் தற்சோதனையையும் நாம் இந்த பிரபஞ்ச உண்மைகளை புரிந்து கொள்ள, கொஞ்சம் கூட கஞ்சத்தனம் இல்லாமல் வஞ்சகமில்லாமல் பயன்படுத்தும்போது பிரபஞ்ச உண்மைகள் நமக்கு அனுபவமாகிறது. இதனுடைய விஞ்ஞானம் என்னவெனில் உயிர்துகள்கள் விரிந்து பரந்து இயங்கி வலிமையோடு இருக்கிறது, என்பதே இதன் மூலம் நாம் அறிந்து கொள்ளவேண்டிய உண்மையாகும். இதனைத்தான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் அறிவில் முழுமை பெருதல் என்ற வார்த்தை மூலமாக, தன்னுடைய அனுபவத்தை நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார்கள். ஆசானின் அனுபவம் நம் அனுபவமாக வாழ்வோம் வளர்வோம் உயிரால். வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment