நித்தியக்கடன் நவம்பர் 05 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

நவம்பர் 05


🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥🕸️🔥


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🎲 இன்றைய சாதகம் 


🎲 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை 


🎲 பொதுவாக இருக்கக் கூடிய சூழ்நிலை, சந்தர்ப்பம் அனைத்தும் அனைவருக்கும் எல்லா நேரத்திலும், எல்லா காலத்திலும் பொருந்தாது. இதில் வேறுபாடுகளும், மாறுபாடுகளும்,  நிச்சயமாக இருக்கும். உதாரணத்திற்கு அனைவரும் உணவு உட்கொள்ள வேண்டும். ஆனால் எல்லா நேரங்களிலும் உணவு உட்கொண்டு கொண்டே இருக்கக் கூடாது. அனைவரும் தவம் செய்ய வேண்டும் ஆனால் எல்லா நேரங்களிலும் தவம் செய்து கொண்டே இருக்கக் கூடாது.


🎲 இன்றைய தற்சோதனன


🎲 மேற் கூறப்பட்ட சூழ்நிலைகளை சற்று விரிவாக தற்சோதனை செய்வோம். உரிய நேரத்தில் தவம் செய்து விட்டு, மற்ற நேரங்களில் உழைக்க வேண்டும். உரிய நேரத்தில் உணவை உட்கொண்டு விட்டு மற்ற நேரங்களில் உழைக்க வேண்டும். தனக்கும், குடும்பத்திற்கும், சுற்றாத்தாருக்கும், ஊறாருக்கும், உலகிறக்கும் என ஐந்து வகையான கடமைகள் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. இந்த கடமைகளில் இருந்து யாரும் நழுவுதல் கூடாது. இவைகளை செய்யாமல் இருக்கவும் கூடாது. நன்றாக தற்சோதனை செய்யுங்கள். இந்த ஐந்து வகையான கடமைகளைச் செய்யும் போதுதான் நமக்கு தவமும், உணவும், நல்ல விளைவைத் தரும்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 எல்லாவற்றுக்குள்ளும் சிறப்பாக இயங்கும் பேரறிவு அது, இல்லாத இடமேகிடையாது. அதை அனைத்தையும் உணர்ந்து, உணர்ந்த நிலையில் தொண்டாற்றி இன்பம் காண்போம். இந்த உண்மையை உணர்ந்து தொண்டு செய்யும் போது, இந்த பண்பை நிறைவாக ஏற்றுக் கொள்ளும்போது, வாழ்க்கையில் மிகச்சிறந்த உண்மைகள் நம் அறிவில் வெளிச்சமாக வெளிப்படும். வாழ்க வளமுடன்...


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments