வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
நவம்பர் 03
🔴🌿🔴🌿🔴🌿🔴🌿🔴🌿🔴
🚥 இன்றைய நித்தியக்கடன்
🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🚥 இன்றைய சாதகம்
🚥 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🚥 இன்றைய நற்சிந்தனை
🚥 ஒரு உடலில் ரத்தத்தின் அளவு குறையாமல் இருக்க வேண்டும். ரத்தத்தில் எல்லாவிதமான சத்துப் பொருட்களும் இருக்க வேண்டும். உடல் உள்ளுறுப்புகள் அனைத்தும் இருதயம், நுரையீரல், இரைப்பை, மண்ணீரல், கல்லீரல், சிறுகுடல், பெருங்குடல், நாளமில்லா சுரப்பிகள் அனைத்தும் சீராக இயங்க வேண்டும். இவ்வாறு உடல்நிலை இருந்து இயங்கும் போது அந்த உடலுக்கு எந்தவிதமான நோயும் நோய்த்தொற்றும் ஏற்படாது. நோய் எதிர்ப்பு சக்தி என்பதும், உடல் ஆரோக்கியம் என்பதும் இதனுடைய அடிப்படையிலேயே அமைகிறது.
🚥 இன்றைய தற்சோதனன
🚥 உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளில் நாள் தவறாமல் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் போதும், மனம் ஒன்றி பயிற்சிகளை செய்யும் போதும் பல வகையிலும் முறையிலும் ஆய்வு செய்து இதனுடைய விஞ்ஞானத்தை உணர்ந்து கொள்ளும் போதும். இவை அனைத்தும் சாத்தியம் உணவை உண்ணும் போது வேறு எந்த சிந்தனையும் செயலும் இல்லாமல் உணவின் மீது முழு கவனமும் வைத்து, நன்றாக மென்று உணவை குடிக்க வேண்டும். "உணவை குடி, நீரை விழுங்கு" என்ற பழமொழிக்கு ஏற்றவாறு உணவை நன்றாக மென்று உமிழ்நீரோடு கலந்து குடிக்க வேண்டும். நீரை சிறுக சிறுக விழுங்க வேண்டும்.
🚥 இன்றைய பண்புப்பயிற்சி
🚥 உணவில் ஆறுவகை சுவையும் கட்டாயம் இருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள் ஒரு நிலக்கடலை அளவிற்கு நாட்டுச்சக்கரை அல்லது கருப்பட்டி எடுத்துக்கொள்ளலாம். குறிப்பு:- வெள்ளை சர்க்கரை யாருமே உபயோகப்படுத்த வேண்டாம் இனிப்பு சுவையை முதல் உணவாக எடுத்துக் கொள்ளவும். அளவோடு முறையோடு இவைகளை வரையறைத்துக் கொள்ளும் போது உடல் சக்தி, மனோசக்தி, உயிர் வளம் அனைத்தும் நிறைவாகவே நமக்குள் இருக்கும். இதன் விளைவாக இறை ஞானம் பெருகும். வாழ்க வளமுடன்...
🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment