வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 31
🌐🎍🌐🎍🌐🎍🌐🎍🌐🎍🌐
🌋 இன்றைய நித்தியக்கடன்
🌋 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌋 இன்றைய சாதகம்
🌋 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🌋 இன்றைய நற்சிந்தனை
🌋 ஆறு மாத காலம் மண்ணோடு மண்ணாக இருந்து, அதனுடைய சத்துக்களை எல்லாம் தனதாக்கிக் கொண்டும் அந்தந்த காலத்தில் ஏற்படும் பருவநிலை மாற்றங்களை எல்லாம் தனக்குள் தகவமைத்துக் கொண்டும், ஒரு நெற்பயிர் நெல்லை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு செய்யப்பட்ட விவசாயம் மிகவும் ஆரோக்கியமானதாக இருந்தது. இப்போது காலத்தை சுருக்கி நிறைய நெல் ரகங்களை உற்பத்தி செய்கிறார்கள். இது ஆரோக்கியமில்லாத விவசாயமாக மாறிவிட்டது. இதனால் மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, உலகம் முழுவதும் நோய்கள் அதிகரிக்க காண்கின்றோம்.
🌋 இன்றைய தற்சோதனன
🌋 மெதுவாகத் துவங்கி நீடித்து நிலைத்து முடியும், ஒரு சிறப்பு அம்சங்களை கொண்டு நாம் இந்த விவசாயத்தை பின்பற்ற வேண்டும். அவசர உணவு உற்பத்தி, அவசர உணவு உண்ணும் பழக்கம், அவசரமாகவே உயிரும் உடலை விட்டு பிரிந்து விடுகிறது. மனிதர்களும் அவர்கள் சார்ந்த அனைத்து தொழில்களும் அறிவுபூர்வமாக உருவாகும் வரை நாம் இதைசற்று சகித்துக் கொண்டுதான் ஆகவேண்டும். சரியான பயிற்சிகளை மேற்கொண்டு இவைகளை தற்சோதனை செய்து ஏற்று கொள்ளலாம். அத்தகைய பயிற்சி முறையாக வேதாத்திரியம் இருக்கிறது என்பதை ஆய்வு செய்து உணர்வோமாக.
🌋 இன்றைய பண்புப்பயிற்சி
🌋 நடந்து முடிந்த நிகழ்ச்சிக்கும், நடக்கவேண்டிய நிகழ்ச்சிக்கும், இடையில் திட்டமிட்டுக் கொண்டு, அதற்குத் தகுந்த சரியான முயற்சிகளை மேற்கொள்வது தான் மனித அறிவு, சிந்தனை, செயல்பாடு, சிறப்பு அனைத்துமாகும். நமக்கான பொறுப்புக்களும், கடமைகளும் ஏராளமாக இருக்கிறது, அவைகளில் சரியாக நம்மை பொருத்திக் கொள்ள வேண்டும். சகிப்புத்தன்மை, விட்டுக் கொடுத்தல், தியாகம் இப்பண்புப் பயிற்சியில் நம்மை ஆழமாக ஈடுபடுத்திக்கொண்டு, அறிவில் முழுமை பெற வாழ்வோமாக. வாழ்க வளமுடன்...
🌋 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌋 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment