வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 30
🕸️🏮🕸️🏮🕸️🏮🕸️🏮🕸️🏮🕸️
💥 இன்றைய நித்தியக்கடன்
💥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💥 இன்றைய சாதகம்
💥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
💥 இன்றைய நற்சிந்தனை
💥 காடு மலை இதுமாதிரியான பகுதிகளுக்கு சென்று வரும்போது, அவர்களுடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதாக ஒரு ஆய்வு அறிக்கை சொல்கிறது. மேலும் இது மாதிரியான பகுதிகளுக்குச் நடந்து செல்லும் போது ஆரோக்கியம் இன்னும் அதிகமாக மனோரீதியாக நிறைய மாற்றங்கள் ஏற்படுவதாகவும் அந்த ஆய்வு சொல்கிறது. இதனுடைய விஞ்ஞானத்தை நாம் கொஞ்சம் ஆழமாக சிந்தித்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
💥 இன்றைய தற்சோதனன
💥 காட்டு வழிப்பாதையிலும், மலைப்பகுதியிலும், நிறைய மூலிகைகள் அவற்றிலிருந்து வரும் சுத்தமான காற்று, இவற்றை சுவாசிக்கும் போது இயல்பாக நம்முடைய செல்கள் அனைத்தும் புத்துணர்வு பெறுகிறது. மேலும் நடந்து செல்லும் போது நம்முடைய உடல் செல்கள், தசைகள், நரம்பு மண்டலம் அனைத்தும் இயக்கப்பட்டு அவைகளுக்கும் தேவையான ஆற்றல்கள் உள் வாங்கப்படுகிறது. இதன் காரணமாகவே காடு மலைப் பகுதிகளில் சென்று வரும், அன்பர்களுக்கும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் உடல்நல ஆரோக்கியம் என்பது சிறப்பாக அமைகிறது.
💥 இன்றைய பண்புப்பயிற்சி
💥 அனைவரும் இந்த காடு மலை போன்ற பகுதிகளுக்கு சென்று வருவது என்பது இயலாது காரியமாகும். இருப்பினும் அது போன்ற ஆற்றல் பெறுகுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், உடலை நன்றாக முன்னும், பின்னும், பக்கவாட்டிலும் அசைத்து செய்யக்கூடிய உடல்பயிற்சி செய்யும் போது பிரபஞ்சவெளியில் வான்காந்தத்தில் பலதரப்பட்ட ஆற்றல்கள் இருக்கின்றன. அவைகளையெல்லாம் உள்வாங்குவதற்கு இந்த உடல்பயிற்சியை செய்து உடலை தயார் செய்ய வேண்டும். உடல் ஆரோக்கியம் மன ஆரோக்கியம் என்பது அமையும். இதன் விளைவாக அறிவு முழுமை பெறும் வாழ்க்கையில் நிம்மதியும் அமைதியும் கிட்டும். வாழ்க வளமுடன்...
💥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment