வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 30
🎲🫐🎲🫐🎲🫐🎲🫐🎲🫐🎲
🌞 இன்றைய நித்தியக்கடன்
🌞 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. அன்னை லோகாம்பாள் அவர்களது பிறந்த தினத்தை மனைவி நல வேட்பு விழாவாக கொண்டாடுகிறோம், அனைவருக்கும் மனைவி நல வேட்பு நாள் வாழ்த்துக்கள்
🌞 இன்றைய சாதகம்
🌞 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🌞 இன்றைய நற்சிந்தனை
🌞 மனம் தன்னுடைய மதிப்பை இழக்குமேயானால் அதைத்தொடர்ந்து அந்த மனிதருடைய செயல், பேச்சு, எண்ணம் அனைத்தும் மதிப்பை இழந்து விடும். மற்றவர்களால் வெறுக்கத்தக்க ஒரு மனிதராகவே அவர் மாறிவிடுவார், வாழ்க்கையிலும் பலவிதமான சிக்கல்கள் உருவாகும் ஆகவே மதிப்பு இழக்காமல் வாழ்வதுதான் வாழ்வாகும்.
🌞 இன்றைய தற்சோதனன
🌞 மனிதனுடைய மதிப்பை மேம்படுத்திக்கொள்ள தேவையற்றவைகளை கண்டறிந்து சிறு திருத்தம் செய்து அவைகளை நிலைப்பதற்கு நாம் ஒரு நாளும் ஒரு பொழுதும் தயங்க கூடாது. பழக்கங்களை தற்சோதனை செய்து தேவையற்றவைகளை அகற்றிக் கொள்ள எப்போதும் முனைப்பாக இருக்க வேண்டும்.
🌞 இன்றைய பண்புப்பயிற்சி
🌞 ஆன்மீக வாழ்வில் நாம் தேவையற்றவைகளை இழப்பதற்கு தயாராகும் போது தான் ஆன்மீகத்தில் அடித்தளங்கள் அமைகின்றன இந்த அடித்தளம் அமைப்பதில் ஒருபோதும் பின்தங்கி விடக்கூடாது. சூழ்நிலைகள் ஏறுக்கு மாறாக அமைந்த போதும் விடாமுயற்சியோடு இருந்து தவிர்க்கப் படவேண்டியதையும், நம்மிடமிருந்து அகற்றப்பட வேண்டியதையும் அகற்றியே தீரவேண்டும். அகற்றுவோம் அறிவோடு இணைந்து வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌞 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌞 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment