வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 25
🔮⛳🔮⛳🔮⛳🔮⛳🔮⛳🔮
💐 இன்றைய நித்தியக்கடன்
💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
💐 இன்றைய சாதகம்
💐 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
💐 இன்றைய நற்சிந்தனை
💐 நமக்குள் இருக்கக்கூடிய பல்வேறு வகையான உணர்வுகளும், சிந்தனைகளும், செயல்திறனும் இதற்கு முன் நாம் இந்த பூமியில் ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் மொத்தத் தொகுப்பே மனிதனாகும். எல்லா வகையான ஜீவன்களாகவும் இருந்து வாழ்ந்து தான் தன்னைத்தானே உணர்ந்து கொள்ளக்கூடிய, சிறப்பான ஆறாவது அறிவோடு இந்த மனித தோற்றத்திற்கு வந்திருக்கிறோம். ஆகவே நமக்குள் இருக்கக்கூடிய எல்லாவகையான உணர்வுகளும் நாம் முன்னே வாழ்ந்து பெற்ற அனுபவங்களின் தொகுப்பே ஆகும்.
💐 இன்றைய தற்சோதனன
💐 ஓரறிவு முதல் ஐந்தறிவு வரை நாம் வாழ்ந்ததன் அனைத்து எண்ணங்களும் சிந்தனைகளும் நமக்குள் இருந்து நம்மை ஒரு பக்கம் வழி நடத்தும். இதை நாம் முறைப்படுத்திக் கொண்டு இந்த விலங்கின பதிவுகளை எல்லாம் போக்கிக் கொள்ள கூடிய பயிற்சி முறைகளை, சரியாக செய்து எண்ணங்களை செயல்களை ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி ஒரு வாய்ப்பை நாம் நம்முடைய உடலுக்கும் மனதிற்கும் கொடுக்கவில்லை என்றால், உருவம் மனிதனாகவும், செயலும், சிந்தனையும், விலங்காவும், இருவேறுபட்ட தன்மையிலும், முறையிலும் நாம் வாழ்வோம்.
💐 இன்றைய பண்புப்பயிற்சி
💐 மனிதத் தன்மையை நமக்குள் மேலோங்க செய்து கொள்ள வேண்டுமானால், மன ஒர்மைக்கான பயிற்சியும், அறிவுத் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சியும், உடல் நலத்திற்கான பயிற்சியும் தேவை. ஆறாவது அறிவின் உயர்வு பெறும் போது தான், மனிதநேயமும் தெய்வீக சிந்தனையும் நமக்குள் உயர்வு பெறும். இந்த நல்ல சிந்தனைகளையும் செயல்களையும், சரியான பயிற்சியை கொண்டு தான் வளர்த்துக் கொள்ளவும் முடியும். நாள் தவறாமல் உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை செய்து ஆறாவது வழியில் நாமும் நம் குடும்பமும் உயர்வு பெறுவோம். வாழ்க வளமுடன்...
💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment