நித்தியக்கடன் செப்டம்பர் 24 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 24


🪩☘️🪩☘️🪩☘️🪩☘️🪩☘️🪩


🏮 இன்றைய நித்தியக்கடன்


🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🏮 இன்றைய சாதகம் 


🏮 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🏮 இன்றைய நற்சிந்தனை 


🏮 மனம் மூன்றுவித தன்மைகளாக இயங்குகிறது அவை மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் பொதுவாக நம்முடைய அன்றாட செயல்கள் அனைத்தையும். இந்த மேல் மனதிலிருந்துதான் செய்து சிந்தித்து செயல்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நடு மனதிற்கு நாம் தவநிலையில் தான் சென்று வந்து பழகியிருக்கிறோம். தவப்பயிற்சி இல்லாதவர்கள் இந்த நடு நிலைக்கு உறக்கத்தில் தான் சென்று பழகி இருக்கிறார்கள்.


🏮 இன்றைய தற்சோதனன


🏮 தவப்பயிற்சியின் ஆரம்ப சாதகர்களுக்கு இந்த நடுநிலை மனம் செல்லும்போது, உறக்கம் தான் வரும். ஏனெனில் நாம் அந்த மனோநிலைக்கு இதற்கு முன் சென்று உறங்கி, உறங்கி தான் பழக்கம். தவத்தில் இருக்கும் போது மனதை உறங்க விடாமல் மீண்டும், மீண்டும் எந்த மையத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறோமோ அந்த மையத்தில். நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன். என்ற விழிப்பு நிலையோடு தவம் செய்ய வேண்டும். இந்த தற்சோதனையை நாள் தவறாமல் செய்து சிறப்பு பெறுவோம். 


🏮 இன்றைய பண்புப்பயிற்சி


🏮 ஒரு பெண் வயிற்றில் கரு உருவாகும்போது. அதை மூன்று மாத காலம் மிகுந்த கவனத்தோடு பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கரு முழுமையாக உருவாகும். இது போலத்தான் தவத்தில் ஆரம்ப காலகட்டங்களில் நாம் மிகுந்த கவனத்தோடு ஒவ்வொரு படியாக கடக்க வேண்டும் இது வளர்ச்சி பெறும் காலம். ஆக நாமாக கற்பனை செய்து கொண்டு இந்த வளர்ச்சிக்கு எதிரான செயல்பாடுகளை செய்து விடக்கூடாது. வளர்சிக்கு உகந்த செயல் பண்பில் உயர்வோம். "ஐந்தில் அளவு முறை" இதுவே வளர்ச்சிக்கிகும், உயிருக்கும் உகந்த பண்பு வாழ்க வளமுடன்...   


🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments