வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 18
💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥🕳️💥
🍃 இன்றைய நித்தியக்கடன்
🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍃 இன்றைய சாதகம்
🍃 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍃 இன்றைய நற்சிந்தனை
🍃 மனதிற்கு உள்ளாக இருக்கும் உட்பொருளை அறிந்து கொள்ளும் முயற்சியில், இந்த மனித சமுதாயம் எடுத்த பல வழிமுறைகள் இந்த பூமியில் இருக்கின்றன. இவற்றில் தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்ப விளைவு ஏழாத முறையில் உருவாக்கப்பட்டதே வேதாத்திரியமாகும். விளைவறிந்த விழிப்பு நிலையோடு இந்த குண்டலினி யோக முறையில் உங்களை நாள் தவறாமல் இணைத்துக்கொண்டு உடல் பயிற்சி, காயகற்பம், தவம், தற்சோதனை இந்த நான்கு வழிமுறைகளிலும் நன்றாக பயிற்சி செய்யும்போது உயிரும் மனமும் நிறைவாக உடலில் தங்கி இயங்கும்.
🍃 இன்றைய தற்சோதனன
🍃 உடலில் உயிர் தங்கி இயங்கும் போது, மூளை செல்களும் உடலில் உள்ள அனைத்து உள் உறுப்புகளும், முழுமையான இயக்கத்திற்கு வரும் மூளையின் மூலமாகத்தான், இந்த பிரபஞ்ச உண்மைகளை எல்லாம் நாம் உணர்ந்து கொள்ளக்கூடிய, சிறப்பான ஏற்பாடுகளை இயற்கை என்ற பேராற்றல் செய்து வைத்திருக்கிறது. இதை உளுணர்வாக உணர்ந்து மேலும் மேலும், நாம் அறிய வேண்டிய பலவகையான உண்மைகளையெல்லாம் உணர்வதற்கும், இந்த பயிற்சி முறைகள் நமக்கு உள்ளும் புறமும் நிறைந்து பேருதவியாக அமையும். நன்றாக தற்சோதனை செய்து இதனை ஏற்று வாழ்க்கையை நிறைவாக வாழ்ந்து பயன் காண்போம்.
🍃 இன்றைய பண்புப்பயிற்சி
🍃 இருவகையான வினைத்தொடர் (சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம்) நம்மை இந்த உண்மைகளையெல்லாம், உணரமுடியாத வழி வகையில் நமக்குள்ளகவே இருந்து தடுத்துக் கொண்டும், தனக்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொண்டும் இருக்கும், இந்த கர்ம வினைகளின் விளையாடல்களை எல்லாம் நாம் தெளிவாக உணர்ந்து கொள்வதற்கு, மன அலைச்சுழலை குறைத்து குறைத்து, எப்போதும் எங்கேயும் விழிப்பு நிலையோடு வாழும் பண்பில் உயரவேண்டும். அப்போதுதான் நமக்குள்ளாகவே இருக்கும் மறைபொருளோடு, நாம் இணைந்து இயங்கவும் வாழவும் முடியும். வாழ்க வளமுடன்...
🍃 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍃 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment