நித்தியக்கடன் செப்டம்பர் 15 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 15


💠🪴💠🪴💠🪴💠🪴💠🪴💠


💐 இன்றைய நித்தியக்கடன்


💐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


💐 இன்றைய சாதகம் 


💐 ஞாயிற்றுகிழமை 

காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம் 

மாலை:- இறைநிலை தவம்.


💐 இன்றைய நற்சிந்தனை 


💐 ஒரு சமையலறையில் ஒரு இல்லத்தில் என்னென்ன பொருள்களை வைத்திருக்கிறோமோ, அவை அனைத்தையும் நாம் பயன்படுத்தான் போகிறோம். பயன்படுத்தப்படாத பொருள்களை தனியாக ஒரு அறையில் வைத்திருப்போம். இவைகளையும் என்றாவது ஒரு நாள் பயன்படுத்துவோம். இதுபோல நம் மனதில் என்னவெல்லாம் வைத்திருக்கிறோமோ, அவை அனைத்துமே பயன்பாட்டிற்கு வந்தே தீரும். அவற்றில் நல்லவை, தீயவை, பயன்படுபவை, பயன்படாதவை என்று எந்தவிதமான பாரபட்சமும் இல்லாமல் எல்லா விதமான எண்ணங்களும் எழுச்சி பெறும்.


💐 இன்றைய தற்சோதனன


💐 தேவை, பழக்கம், சந்தர்ப்ப சூழ்நிலைகள், பிறர் மனத் தூண்டுதல், கருவமைப்பு, தெய்வீகம் இந்த ஆறின் வழியாக நமக்குள் இருக்கும் எல்லா வகையான எண்ணங்களும், புறச் சூழ்நிலைகளுக்கு ஏற்ப எழுச்சி பெறவே செய்யும். ஆக நாம் எதை வைத்திருக்க வேண்டும் என்பதில் முடிவெடுத்து தேவை இல்லாதவைகளை, மனதிலிருந்து அகற்றிக் கொள்ள திட்டமிட்டு விருப்பத்தோடு விடா முயற்சி செய்தல் வேண்டும். தன்னுடைய தேவைகளை முறைப்படுத்தி கொள்ளாமல் வாழும் தம்பதியர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில், அவர்களுக்கு தேவையில்லாததை எல்லாம் தேவையாக்கி கொள்வார்கள்.


💐 இன்றைய பண்புப்பயிற்சி


💐 தேவையில்லாத பொருள்களை அடுக்கி வைக்கும் அறை போல மனதை பயன்படுத்தாதீர்கள். சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை  காலை, மாலை செய்யவேண்டிய பயிற்சிகளை ஒவ்வொரு நிமிடமும் அயராவிழிப்பு நிலையோடு இருந்து செய்ய வேண்டிய பயிற்சியை ஒவ்வொரு கனமும் செய்வோம். சுத்தத்தையும் சுகாதாரத்தையும் மனதில் இருந்து துவங்குவோம். வாழ்க வளமுடன்...      


💐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


💐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments