வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 13
🪇🏵️🪇🏵️🪇🏵️🪇🏵️🪇🏵️🪇
🫐 இன்றைய நித்தியக்கடன்
🫐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🫐 இன்றைய சாதகம்
🫐 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🫐 இன்றைய நற்சிந்தனை
🫐 மனிதர்களுக்குக் கிடைத்து இருப்பது மிகச்சிறந்த வாய்ப்பாகும். அப்படி என்ன மனிதனுக்கு சிறந்த வாய்ப்பாக அமைந்து விட்டது? என்றால்! தன்னைத்தானே உணர்ந்து கொள்ள கூடிய ஆறாவது அறிவு. தன்னுடைய மூலமான இறைவனைப் பற்றிய தேடலுக்கு எந்த பிறவியிலும் கிடைக்காத வாய்ப்பு, இந்த மனிதப் பிறவியில் அமைந்திருக்கிறது. இதைவிட வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்த மனிதப்பிறவிக்கு.
🫐 இன்றைய தற்சோதனன
🫐 இவ்வளவு சிறப்போடு மனிதப்பிறப்பு அமைந்திருந்தாலும், மனிதனிடம் அமைந்துள்ள வித்து தொடராக வந்த விலங்கின பதிவுகள் மனிதனுடைய சிறப்பையும் இறைவனை உணரக்கூடிய வாய்ப்புக்கு தடையாக இருக்கிறது. அகநோக்கு பயிற்சியாலும் தற்சோதனை பயிற்சியாலும் கொஞ்சம் கொஞ்சமாகத்தான், இதிலிருந்து மனிதர்கள் தங்களை தாங்களே விடுவித்துக் கொள்ள முடியும்.
🫐 இன்றைய பண்புப்பயிற்சி
🫐 தியான பயிற்சியோடு எதனையும் ஆழமாக சிந்திக்க கூடிய பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டால், நமக்கான சிறப்புத் தன்மைகளை வளர்த்துக் கொள்ள முடியும். சிக்கலில்லாத இடர்பாடுகள் இல்லாத இறைநிலையை நோக்கிய இந்த பயணம் வெற்றி பெறவும், முழுமை பெறவும் ஆழ்ந்து சிந்திக்கும் பண்பை வளர்த்துக் கொள்வோம்.வாழ்க வளமுடன்...
🫐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🫐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment