வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 11
🪩🔥🪩🔥🪩🔥🪩🔥🪩🔥🪩
🍂 இன்றைய நித்தியக்கடன்
🍂 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍂 இன்றைய சாதகம்
🍂 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🍂 இன்றைய நற்சிந்தனை
🍂 கனவால் உருவாக்கி, கனவில் கலந்து, கனவில் பிறந்து, கனவுகளுக்கு மத்தியில், கனவுகளோடு போராடிக் கொண்டு, கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்து கொண்டிருக்கும், ஒரு கனவான நிஜம். நிஜமான கனவு தான் மனிதன். பலவிதமான சிக்கல்கள், குழப்பங்கள், கனவுகள் இவைகளின் தொகுப்பாகவே இந்த மனித வாழ்க்கை காணப்படுகிறது. இவை அனைத்தும் எப்படி? ஏன்? எதனால் அமைந்தது? என்றால் இதற்கான ஒரே பதில்...
🍂 இன்றைய தற்சோதனன
🍂 வித்து தொடராக விளங்கினப் பதிவோடு, நாம் இந்த மனிதநிலைக்கு தன்மாற்றம் பெற்றுள்ளதாலேயே இவை அனைத்தும் நமக்குள் உணரப்படுகிறது. இவைகளிலிருந்து நம்மால் நம்மை மீட்டு எடுத்துக் கொள்ள முடியாதா? என்றால் நிச்சயமாக முடியும். அதற்கு சரியானதொரு பயிற்சி முறை தேவை. அதுதான் மனவளக்கலை பயிற்சி. இந்த பயிற்சி முறையை இறுக பற்றிக் கொண்டால் போதும் குழப்பம், சிக்கல், கனவு அனைத்தும் நீக்கப்பட்டு விடும்.
🍂 இன்றைய பண்புப்பயிற்சி
🍂 இவைகள் நீங்கியபின் வாழ்க்கையில் ஆரோக்கியம், ஞானம், ஈகை என்று உண்மையான மனித வாழ்க்கை துவங்கும். அந்த உண்மையை நோக்கி பயணம் செய்வதற்கு நமக்கு துணையாக உடல்பயிற்சி, காயகல்பம், தவம், தற்சோதனை இவைகளை இறுகப் பற்றிக் கொண்டு இருள் நிறைந்த இப்போதைய மனித வாழ்க்கையை, ஒளியை நோக்கி தாராளமாக நகர்த்தி கொள்ளமுடியும். "ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு" -திருக்குறள் வாழ்க வளமுடன்...
🍂 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍂 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment