நித்தியக்கடன் செப்டம்பர் 10 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 10


🎍🍄🎍🍄🎍🍄🎍🍄🎍🍄🎍


🔮 இன்றைய நித்தியக்கடன்


🔮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🔮 இன்றைய சாதகம் 


🔮 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🔮 இன்றைய நற்சிந்தனை 


🔮 இந்த பிரபஞ்ச களத்தில் பல்வேறு வகையான காந்தங்கள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக எல்லாவற்றையும் ஒரே வார்த்தையில் வான்காந்தம் என்று பேசுகின்றோம். அவைகளை முறையாக பகுத்து பிரித்து உணர்ந்தால், பல்வேறு வகையான காந்த ஆற்றல் பிரபஞ்சத்தில் இருப்பதை உணரலாம். ஒவ்வொரு கோள்களில் இருந்து வரும் காந்தத்தின் தன்மை வேறுபடும். இதேபோன்று ஒவ்வொரு நட்சத்திர தொகுதிகளில் இருந்து வரும் காந்த அலையும் வேறுபடும். ஒவ்வொரு பால்வெளி அண்டத்திலிருந்து வரும் காந்த அலையும் வேறுபடும். இவை அனைத்திலும் தன்மை மாறும், தரம் மாறும், மனிதர்களுக்குள் பாய்ந்து இயங்கும் திறன் மாறும். ஆக ஒரே மாதிரியாக பிரபஞ்ச வான் காந்த சக்தி கிடையவே கிடையாது.


🔮 இன்றைய தற்சோதனன


🔮 அவரவருடைய பருஉடல் தாங்கும் தகுதியை எப்போது பெறுகிறதோ, அப்போது அந்த அந்த காந்த சக்தியோடு உயிர் துகள்கள் இணையும். இந்த உடலுக்கு வான்காந்த தீர்க்கமான இணைப்பை உயிர் துகள்கள்தான் முடிவு செய்கின்றன. ஆக உயிர் துகள்கள் எந்த அளவுக்கு வலிமையோடும் ஆற்றலுடனும் இயங்குகிறதோ, அதைப் பொருத்தே ஜீவாத்மா பரமாத்மாவோடு இணையும். இதனை ஆழமான மௌனநோம்பு மேற்கொண்டு தற்சோதனை செய்து பாருங்கள்.


🔮 இன்றைய பண்புப்பயிற்சி


🔮 கருமையம் தூய்மை பெற்றால் தான் ஒவ்வொரு உயிர்துகள்களும் தூய்மையாகும். வித்து சக்தியில் இருக்கக்கூடிய தூய்மை உயிர்துகள்களை, அதனுடைய ஆற்றலை அதிகரிக்கும். இதன் விளைவாக பிரபஞ்ச காந்த சக்தியோடு ஒன்றிணைந்து இயங்கக்கூடிய ஆற்றலும் திறமையும் உயிர்துகள்களுக்கு கிட்டும். நல்ல எண்ணம், சொல், செயல் இவைகளை அடிப்படையாகக் கொண்டு வாழும் பண்பில் உயர்ந்தால் கருமையம் தூய்மை பெறும். வாழ்க வளமுடன்...           


🔮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🔮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments