நித்தியக்கடன் செப்டம்பர் 09 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 09


💥🌀💥🌀💥🌀💥🌀💥🌀💥


⛳ இன்றைய நித்தியக்கடன்


⛳ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


⛳ இன்றைய சாதகம் 


⛳ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


⛳ இன்றைய நற்சிந்தனை 


⛳ உடல், மனம், உயிர், அறிவு, இவை அனைத்தின் மதிப்பு என்ன என்று தெரியாமல் இவைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். இது எப்படி இருக்கிறது என்றால், கணினி அறிவு இல்லாத ஒரு நபரிடம் கணினி இருந்தால் அவர் அதை எப்படி பயன்படுத்துவாரோ அவ்வாறு இருக்கிறது. எந்த ஒன்றை நாம் பயன்படுத்துகிறோமோ அதனுடைய தன்மை, தரம், திறமை, நுட்பம் அனைத்தையும் அறிந்து கொண்டு அதை பயன்படுத்தினால் தான் அது முழு பயன்பாடாகும்.


⛳ இன்றைய தற்சோதனன


⛳ அகத்தவ, அகத்தாய்வுப் பயிற்சி இல்லாமல் இந்த நான்கினுடைய (உடல், மனம், உயிர், அறிவு) மதிப்பு என்ன என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாது. உள்ளுணர்வு கல்வி மூலமாக நாம் கற்றுக்கொள்ளவேண்டிய, நம்மை மேன்மை படுத்தி கொள்ள வேண்டிய, உயர்த்திக் கொள்ள வேண்டிய நிலைப்பாடாகும். இந்த நிலைப்பாட்டுக்கு நம்மை உயர்த்தும் அந்த நொடிப்பொழுது முதல் வாழ்க்கையினுடைய இன்னொரு பக்கம் நமக்கு அறிமுகமாகும். அதுவரையில் வாழ்க்கை என்பது இருட்டடிப்பாக, கண்ணாமூச்சி விளையாட்டு போலத்தான் இருக்கும்.


⛳ இன்றைய பண்புப்பயிற்சி


⛳ நமக்கு இருக்கக்கூடிய பொறுப்புகளையும், கடமைகளையும் நாம் சரியாக உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு அதற்கு கீழ் நம்முடைய தேவைகளை முறைப்படுத்திக் கொண்டால் தான், மனித வாழ்க்கை என்பது நிறைவாக அமையும். இந்த நிறைவான வாழ்க்கையை நோக்கி இறைவன் நம்மை நகர்த்துகின்றான். இந்த நகர்வுக்கு ஒத்தவாறு நம்முடைய தேவைகளை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியது அவரவர்களுடைய பொறுப்பும், கடமையுமாகும். கடமை மறவாது, காலம் பிறழாது, கடமை செய்வோம். வாழ்க வளமுடன்...          


⛳ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


⛳ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments