நித்தியக்கடன் செப்டம்பர் 07 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 07


🏮💠🏮💠🏮💠🏮💠🏮💠🏮


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🎲 இன்றைய சாதகம் 


🎲 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை 


🎲 நம் உடலுக்குள்ளாக உயிருக்குள்ளாக சுத்தசக்தியை நிரப்பிக் கொள்ள வேண்டும். இந்த சுத்தசக்தியானது உடல் செல்களிலும், உயிர் துகள்களிலும், கருமையத்திலும் இருக்கக்கூடிய கலங்கங்களை நீக்குகின்றது. இந்த கலங்கங்களை நீக்குவதற்கு இந்த சுத்த சக்தியால் மட்டுமே முடியும், என்பதை உணர்ந்ததனால் தான் "வேதாத்திரி மகரிஷி" நமக்கு மனவளக்கலையை அன்போடு அருளியிருக்கிறார்கள்.


🎲 இன்றைய தற்சோதனன


🎲 உடற்பயிற்சி செய்யும் போது உடல் செல்களிலுக்குள் சுத்த சக்தி நிறையும். காயகல்பம் செய்யும் போது உயிருக்குள் சுத்த சக்தி நிறையும். தியானமும், தற்சோதனையும் செய்யும்போது உடல் முழுவதும் நிரம்பிய சக்தியானது நிரந்தரமாக உடலில் தங்கும். இந்த சுத்த சக்தியானது எவ்வாறு பெருகுகிறது, எவ்வாறு உடலில், உயிரில் தங்குகிறது, இதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை தற்சோதனை செய்யுங்கள். தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுங்கள்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 சுத்த சக்தியான ஓஜஸ் ஆற்றலை நாம் நமக்குள் பெருக்கும் முயற்சியில், நம்மை நாம் ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொண்டால் மட்டும் தான் இந்த காரியமானது சித்தியாகும். அதுவரையில் பழக்கத்திற்கும் விளக்கத்திற்குமான போராட்டத்தில் மனித வாழ்க்கை விரயமாகி கொண்டேதான் இருக்கும். நட்டதிலிருந்து உங்களை லாப நிலைக்கு மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வை நீங்கள் வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள். வாழ்க வளமுடன்...         


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments