வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
செப்டம்பர் 05
🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️☘️🏵️
🌌 இன்றைய நித்தியக்கடன்
🌌 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌌 இன்றைய சாதகம்
🌌 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🌌 இன்றைய நற்சிந்தனை
🌌 கண்ணிமைக்கும் நேரத்தில் தற்சுழற்சியோடு வேகமாக ஓடுகிறது உயிர்துகள்கள். அக்ரினை பொருள்களுக்குள் இந்த உயிர் இயங்கும்போது, அதற்கு தேவையான ஆற்றல், வளம் அதற்கேற்ப அதன் அடிப்படையில் இயங்குகிறது. இதே உயிரானது மனிதனுக்குள் அவரவர்களுடைய அனுபவம், அறிவு, சிந்தனைத்திறன், மூளை செல்களின் நுட்பம், நற்பண்புகள் இவைகளுக்கு தக்கவாறு இயங்குகிறது. உயிரின் இயக்கத்தை உயிரில் ஒடுங்கினால் உணரலாம்.
🌌 இன்றைய தற்சோதனன
🌌 மனிதன் எதை நினைத்தாலும் அதுவாகும் திறமையும், நுட்பமும் மனிதர்களிடம் பரவலாக இருக்கிறது. ஆனால் அவர்கள் அதைமுறையாக பயன்படுத்துவதில்லை. விரிந்த மனதோடு தற்சோதனை சிந்தனையோடு உயிரின் நோக்கம், ரகசியம் இதனை உணர்வதற்கான முயற்சியில் மனிதர்களால் மட்டுமே வெற்றி காணமுடியும் இந்த பிரபஞ்சத்தில்.
🌌 இன்றைய பண்புப்பயிற்சி
🌌 இன்பதுன்ப உணர்ச்சிகளில் மனதை சிக்க வைத்துக் கொண்டு, இவைகளுக்கு இடையே போராடிக் கொண்டிருப்பதனால் மனிதர்களால், அமைதியையும் பேரின்பத்தையும் அனுபவமாக்கிக்கொள்ள இயலாமல் போகிறது. இந்த குறைபாட்டினை நீக்கிக் கொள்வதற்கு உணர்வுநிலை, செயல்பண்பு தன்னை உயர்த்திக் கொள்ளும் போது, இக்குறைபாடானது இயல்பாகவே நீக்கப்படுகிறது. நீக்குவோம் நிலைபோம் உயிரோடு உயிராக. வாழ்க வளமுடன்...
🌌 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌌 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
Comments
Post a Comment