நித்தியக்கடன் செப்டம்பர் 04 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 04


🍃🌐🍃🌐🍃🌐🍃🌐🍃🌐🍃


🌸 இன்றைய நித்தியக்கடன்


🌸 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌸 இன்றைய சாதகம் 


🌸 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🌸 இன்றைய நற்சிந்தனை 


🌸 பஞ்ச பூதங்களால் ஆக்கப்பட்ட இந்த பருவுடலானது, பல்வேறு தன்மையோடும், தரத்தோடும், இருக்கிறது, இயங்குகிறது. உயிரின இயக்கமும் இதற்கு ஏற்றார்போல மாற்றம் பெறுகிறது. 103 மூல அணுக்கள் இருப்பதாக விஞ்ஞானத்தில் கண்டறிந்துள்ளார்கள். சித்தர்கள் இதை அக்காலத்தில் 92 தத்துவங்கள் என்று பேசியிருக்கிறார்கள். இந்த அணுக்களின் மூலகங்களுக்கு ஏற்ற உயிருடைய இயக்கமும் வேறுபடும் மாறுபடும். இதன் விளைவாக மன இயக்கமும் மூளையின் இயக்கத்திறனும் மாற்றம் காணும்.


🌸 இன்றைய தற்சோதனன


🌸 தவநிலையில் மனதை பக்குவப்படுத்தி தற்சோதனைகளில், நம்மை ஆழமாக ஈடுபடுத்திக் கொள்ளும் போது, இந்த உண்மைகள் அனைத்தையும் நம்மால் விரிவாகவும், தெளிவாகவும், உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முடியும். அதுவரையில் நம் மனதை பக்குவப்படுத்த கூடிய தொடர் செயல்பாடுகளில், நம்மை ஈடுபடுத்திக் கொண்டு விடாமுயற்சியோடு ஒவ்வொரு நாளும் நாம் பயிற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.


🌸 இன்றைய பண்புப்பயிற்சி


🌸 மனப்பக்குவம் பெறும்போது அதற்கு தகுந்தார் போல உயிரும் அணுக்களின் மூலகங்களும் பல்வேறு வகையில் தன்மையில் தரத்தில் உயரும். இந்த உயர்வை தான் நாம் பிரபஞ்ச ஞான அனுபவம் என்று உணர்கின்றோம். உயிருடைய ரகசியத்தையும், மனிதனுடைய ரகசியத்தையும், இறைவனுடைய இரகசியத்தையும் நம்மால் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இதற்கு தேவையெல்லாம் மனப்பக்குவம் ஒன்றே ஆகும். இந்த பக்குவத்தை பெறுவதற்காக நமக்கு அன்போடும் அருளோடும் வழங்கப்பட்டது தான் வேதாத்திரியம். வாழ்க வளமுடன்...         


🌸 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌸 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments