நித்தியக்கடன் அக்டோபர் 03 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 03


🏵️🌀🏵️🌀🏵️🌀🏵️🌀🏵️🌀🏵️


🪴 இன்றைய நித்தியக்கடன்


🪴 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🪴 இன்றைய சாதகம் 


🪴 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🪴 இன்றைய நற்சிந்தனை 


🪴 மனம் நமக்கு கிடைத்த அழகானதொரு வரம். இந்த வரமானது எப்படி இருக்கிறது என்றால், அட்சய பாத்திரத்தை அதன் விஷயம் அறிந்து பயன்படுத்தும்போது, அது அள்ள அள்ள குறையாமல் கொடுத்துக் கொண்டே இருக்கும். ஆனால் அதன் விஷயம் தெரியாமல் பயன்படுத்தும் போது, அதனை வைத்து கையேந்த கூடிய நிலையாகவே அமையும். மனதை நாம் எப்படி புரிந்து வைத்திருக்கின்றோமோ அதை பொருத்து மனம் நமக்கு பயன்படுகிறது.


🪴 இன்றைய தற்சோதனன


🪴 நம்முடைய கரு மையத்திற்கும் இறைநிலையினுடைய கருமையைதிற்கும் இணைப்பை ஏற்படுத்த கூடிய, ஒரு முழுமையான நிறைவான பாலமாகவே மனம் இருக்கிறது. இதன் பெருமையையும் சிறப்பையும் தெரிந்து கொண்டு இதனை சரியாக பயன்படுத்தினால், இந்த மனதிற்கு ஈடு இணையாக எதுவுமே கிடையாது. இந்த பிரபஞ்சத்தில் மனதினால் முடியாத காரியம் என்று எதுவும் இல்லை. ஆனால் மனம் முழுமை பெற வேண்டும். எந்த வகையிலும் முறையிலும் மனம் சிதைவடையாமல் இயங்கக்கூடிய இயக்கத்திற்கு பெயரே முழுமைப் பேறு.


🪴 இன்றைய பண்புப்பயிற்சி


🪴 சரியானதொரு வழிகாட்டல் மனதிற்கு தேவை. அதை முறைப்படுத்தி பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். மனதின் சிறப்பு மனம் முழுமை பெற்ற நிலையில் தான்,மனிதர்களால் உணர்ந்து கொள்ளப்படுகிறது. அறிவின் வழியாகத் தான் மனதை முழுமைப்படுத்த முடியும். அதுவரையில் மனதை முழுமைப்படுத்து வதற்கு, எல்லா வகையிலும் பயிற்சியை மேற்கொண்டு விடாமுயற்சி செய்ய வேண்டும். அகத்தவம், அகத்தாய்வு, உடல்பயிற்சி, காயகல்பம்,தற் சோதனை  இந்த  கட்டமைப்பை கொண்டு, நம் கருவூலம் வழியாக கடைத்தேறுவோம். வாழ்க வளமுடன்...    


🪴 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪴 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments