நித்தியக்கடன் அக்டோபர் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 02


🍥🍃🍥🍃🍥🍃🍥🍃🍥🍃🍥


🪻 இன்றைய நித்தியக்கடன்


🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🪻 இன்றைய சாதகம் 


🪻புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🪻 இன்றைய நற்சிந்தனை 


🪻ஒரு மூங்கில் தன்னிடத்தில் உள்ள தேவையில்லாத வைகளை தியாகம் செய்ததால் புல்லாங்குழானது. கடும் பாறை தன்னிடத்தில் உள்ள தேவையில்லாத வைகளை தியாகம் செய்ததால் சிற்பமானது. இது போன்று தியாகம் செய்யும் எதுவும் சிறந்த நிலைக்கு உயர்ந்து வந்துவிடும். மனிதனுக்குள் இருக்கின்ற தேவையில்லாததையெல்லாம்  தியாகம் செய்தால் போதும், உங்களால் உயர்ந்த நிலைக்கு உயர  முடியும். பெறுவதற்கு எதுவுமேயில்லை, எல்லாமும் நமக்குள் நிறைவாக உள்ளடக்கமாகவே இருக்கிறது. இழப்பதற்கு தான் நிறைய இருக்கிறது. இதற்கு தேவையானதெல்லாம் பயிற்சி விடா முயற்சி, இது மட்டும்தான்.


🪻 இன்றைய தற்சோதனன


🪻சிறிது சிறிதாக தியாகம் செய்ய துவங்கலாம். உங்களை நீங்கள் நன்றாக சிந்தித்து உணர்ந்து கொண்ட பின், உங்களுக்குள் இருக்கும் தேவையில்லாததில் சின்னதாக ஒன்றை எடுத்துக்கொண்டு, முதலில் அதை விட்டுக் கொடுப்பதற்கும், தியாகம் செய்வதற்கும் முயற்சி செய்யுங்கள். சிறுதுளி பெருவெள்ளம் ஆகும். சின்ன சின்னதாக தேவையில்லாததை யெல்லாம் நம்மிடமிருந்து அகற்றிக் கொள்ளும் போது, நாளடைவில் பெரிதாக நம்மிடம் நமக்கே தெரியாமல் இருக்கும். எதனையும் முழுமையாக உணர்ந்து, தெளிந்து தேவையில்லாத அனைத்தையும், தியாகம் செய்து விடலாம். தற்சோதனை இதற்கு நமக்கு பேருதவியாக இருக்கும். 


🪻 இன்றைய பண்புப்பயிற்சி


🪻பொருள், புகழ், அதிகாரம், புலன் இன்பம் இவைகளிலிருந்து உங்களுடைய தியாகத்தை துவங்குங்கள். தேவையற்ற மன பாரங்களை ஏற்படுத்திக் கொள்ளாமல், மயங்காமல் மதிநுட்பத்தோடு ஆராய்ந்து,

விழிப்பு நிலையோடு வாழ்க்கையை செவ்வனே, சிறப்பாக வாழ்ந்து உயர்ந்து நில்லுங்கள். மற்றவை அனைத்தும் இயற்கை எனும் பேரறிவு நமக்குள் ஞானமாக உயர்த்தி வைக்கும். வாழ்க வளமுடன்...    


🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments