நித்தியக்கடன் செப்டம்பர் 02 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

செப்டம்பர் 02


🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥🌸🔥


🪩 இன்றைய நித்தியக்கடன்


🪩 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🪩 இன்றைய சாதகம் 


🪩 திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, 

பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


🪩 இன்றைய நற்சிந்தனை 


🪩 வான்காந்த மாற்றத்திலும், பூமியில் வாழும் உயிர் வகைகளிலும், இப்பூமியில் நடைபெறக்கூடிய நிகழ்ச்சிகள் அனைத்திலும், மனிதர்களாகிய நாம் அனைவரும் நேரடியாகவும், மறைமுகமாகவும் சம்மந்தப்பட்டவர்களே ஆவோம். இதிலிருந்து எவர் ஒருவரும் மாறியோ மீறியோ வாழ இயலாது. ஒவ்வொரு மனிதனுடைய எண்ணமும், சொல்லும், செயலும் அவர்களை சுற்றியுள்ள குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள், உலகத்தாரை இந்த பிரபஞ்ச வான் காந்தத்தில் ஒரு விளைவை ஏற்படுத்தவே செய்கிறது.


🪩 இன்றைய தற்சோதனன


🪩 நல்ல எண்ணங்களே எண்ணும்போது, அது இந்த வான்காந்த களத்தில் பதிந்து பூமியில் வாழும் உயிர்களுக்கும், நேரடியாக நம்மை சுற்றி உள்ள அனைவருக்கும் அவை நன்மையைத் தருகிறது. மாறாக தீய குணங்களை கொண்டு செயல் செய்தோமேயானால், அது தீய விளைவுகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தி விடுகிறது. இந்த விளைவானது இன்றோ, நாளையோ, அல்லது பல வருடம் கழித்து கூட வரலாம். ஆனால் விளைவு என்பது நிச்சயமாக உண்டு.


🪩 இன்றைய பண்புப்பயிற்சி


🪩 கண்களுக்கு தெரியாத இந்த நிகழ்ச்சிகளை நாம் அலட்சியப்படுத்தி விடக்கூடாது. உங்களுடைய உயிரைப் பற்றிய உண்மைகளை உணர்வதற்கான முயற்சியில் மனதை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டால், இந்த உண்மையும் தெளிவாக உங்களுக்கு புரிந்து விடும். மறைபொருள் விளக்கம் பெருகப்பெருக உங்களுடைய மதிப்பு இயல்பாகவே  தானாக உயரும். இந்த உயர்வை பெறுவதற்காகவே இப்பிறவி அமைந்துள்ளது, என்பதை உணர்ந்து வாழ்வோம். தொண்டாற்றி இன்பம் காண்போம் வாழ்க வளமுடன்...         


🪩 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🪩 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


Comments