நித்தியக்கடன் அக்டோபர் 01 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

அக்டோபர் 01


🔥🔮🔥🔮🔥🔮🔥🔮🔥🔮🔥


🌼 இன்றைய நித்தியக்கடன்


🌼 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. 


🌼 இன்றைய சாதகம் 


🌼 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🌼 இன்றைய நற்சிந்தனை 


🌼 நமக்கு மூன்று வகையான உடல்கள் இருக்கின்றன. அவை பருவுடல், உயிருடல், காந்த உடல் இவ்வகையான உடல்களில் பருவுடலானது ஒரு எல்லைக்கு உட்பட்டது. உடலளவு அதனுடைய இயக்கங்களும் செயல்பாடுகளும் முடிந்துவிடுகிறது. இந்த உயிருடலும், காந்த உடலும் அவ்வாறு இல்லை. அவைகளுக்கு சரியான வாய்ப்பு மட்டும் அமையுமேயானால் இந்த பிரபஞ்சம் முழுவதிலும், அதில் உள்ள கோள்கள் நட்சத்திரங்கள் அனைத்தோடும் இணைந்து இயங்க கூடிய ஆற்றலையும், திறமையையும் உள்ளடக்கமாக பெற்றுள்ளது. 


🌼 இன்றைய தற்சோதனன


🌼 இந்த இணைப்பும் இயக்கமும் எவ்வாறு நடைபெறுகிறது, என்பதை மனவளக்கலை பயிற்சியில் முறையோடு, முறையாக நம்மை இணைத்துக் கொண்டு, பொறுமையாக முயற்சி செய்யும்போது, இதனுடைய விஞ்ஞான மெய்ஞானத்தை எவராயினும் அனுபவமாகப் பெறமுடியும். தேவையானது எல்லாம் பண்பட்ட, அதற்கு தகுதியான மனோநிலை மட்டும்தான். எண்ணம், சொல், செயல் இவைகளை பயன்படுத்தும்போது மனித நேயம், இறை தன்மை இதன் அடிப்படையிலேயே இந்த இறைநிலையின் தன்மாற்ற சரித்திரம் அனுபவமாகும்.


🌼 இன்றைய பண்புப்பயிற்சி


🌼 இந்த மண்ணுலகில் தற்காலத்தில் மனிதர்கள்தான் பலவகையான சிக்கல்களை ஏற்படுத்திக் கொண்டு, அதற்குள் தானும் சிக்குண்டு மற்றவர்களையும் சிக்கவைத்து, இதிலிருந்து தப்பி செல்ல முடியாத அளவிற்கு ஒரு மாயையான வாழ்க்கை முறைக்குள், தன்னுடைய வாழ்நாட்களை மனிதர்கள் கழித்துக் கொண்டு இருக்கிறார்கள் இந்த மனிதர்கள் வாழ்க்கையில் மனிதர்கள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சிக்கல்கள் தான் அதிகம். இந்த அண்டவெளியில் எந்த ஒரு சிக்களுமில்லாமல் எல்லாவற்றையும் தெளிவாக உணர்ந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், அனுபவத்தை ஏற்படுத்திக் கொள்ளவும் சுலபமாக முடிகிறது. அதற்கு முழுமையாக வேதாத்திரியம் பயன்படுகிறது. பயன்படுத்தி பண்படைவோம் பயன் காண்போம். வாழ்க வளமுடன்...   


🌼 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🌼 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸

Comments