வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 27
🏮💐🏮💐🏮💐🏮💐🏮💐🏮
🍃 இன்றைய நித்தியக்கடன்
🍃 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍃 இன்றைய சாதகம்
🍃 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🍃 இன்றைய நற்சிந்தனை
🍃 புத்தம் புது காற்று, புத்தம் புது பூமி, புத்தம்புது உடல் நிமிடத்துக்கு நிமிடம் எல்லாவகையான அணுக்களும் வட துருவத்தின் வழியாக உள்நுழைகிறது தென் துருவத்தின் வழியாக வெளியேறுகிறது. எந்த ஒரு அணுவும் நிலையாக இருப்பதில்லை இடம் விட்டு இடம், நகர்ந்து கொண்டே இருக்கிறது, இந்த கோட்பாட்டின் அடிப்படையில் எல்லாமே புத்தம் புதிது நிமிடத்திற்கு நிமிடம் நொடிக்கு நொடி மாறிக்கொண்டே இருக்கிறது, எதுவுமே நிரந்தரமாக அப்படியே இருப்பதில்லை.
🍃 இன்றைய தற்சோதனை
🍃 அணுக்கள் வளர்ச்சி அடைகிறது, தன்னைப் போல இன்னொரு அணுவை உற்பத்தி செய்கிறது, சத்துப்பொருட்களை ஆற்றலாக மாற்றுகிறது, தூண்டு வினைக்கு பதில்வினை செய்கிறது. இந்த அனைத்தும் நம் உடலுக்குள்ளும், பிரபஞ்சத்திலும் நடைபெறும் நிகழ்ச்சி இந்த நிகழ்ச்சியை சரியாகப் புரிந்து கொள்வதற்காகவே குண்டலினி யோகமும், தற்சோதனையும் மனிதர்களுக்கு அன்போடு வழங்கப் பட்டிருக்கிறது.
🍃 இன்றைய பண்புப்பயிற்சி
🍃 கொஞ்சம், கொஞ்சமாக சார்பு தன்மையிலிருந்து உங்களை நீங்களே விலக்கிக் கொள்ளுங்கள், நடுநிலை பண்போடு அனைத்தையும் ஆய்வு செய்யுங்கள், சிந்தனை செய்யுங்கள். கடும்பற்றை தளர்த்திக் கொள்ளுங்கள், உடல் தளர்வாக இருக்கட்டும், மனம் தளர்வாக இருக்கட்டும் எங்கேயும், எப்போதும். எல்லாவற்றிலும் இருக்கக்கூடிய நுண்மைக்கு நுண்மையான உள்ளமைப்பை, உண்மைக்கு உண்மையான அருள் அமைப்பை ஆழ்மனதிற்கு அப்பால் சென்று நிலைத்து நின்று முயற்சி செய்யுங்கள், உணருங்கள் நடுநிலை பண்போடு வளமாய் வாழுங்கள். வாழ்க வளமுடன்...
🍃 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍃 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment