வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஜூலை 26
☘️🍄☘️🍄☘️🍄☘️🍄☘️🍄☘️
🌷 இன்றைய நித்தியக்கடன்
🌷 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌷 இன்றைய சாதகம்
🌷 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🌷 இன்றைய நற்சிந்தனை
🌷 காலச்சக்கரத்தின் சுழற்சியில் மாமரத்தில் மாங்காய் அதிகமாக காய்த்தால் புளியங்காய் குறைவாக காய்க்கும். புளியமரத்தில் புளியங்காய் அதிகமாக காய்த்தால் மாங்காய் குறைவாக காய்க்கும். இது தான் இயற்கையின் நீதி. இந்த பூமி தன்னிடம் உள்ள ஆற்றலை எவ்வளவு அழகாக அக்ரினை உயர்திணை என்று அனைத்திடமும் பகிர்ந்து அளிக்கிறது. இதுதான் இயற்கையின் கோட்பாடுடாகவும், இறைநீதியாகவும் ஆன்மீகத்தில் பேசப்படுகிறது.
🌷 இன்றைய தற்சோதனை
🌷 இந்த பூமி முழுவதும் இருக்கக்கூடிய ஆற்றல் பகிர்ந்து அளிக்கப்பட்டு, எது தேவையோ அதை சீராக உற்பத்தி செய்து கொள்கிறது. இதே கோட்பாடு நமக்குள்ளும் இருக்கிறது. உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மனம் எப்போதும் வேகமாக இயங்கிக் கொண்டே இருப்பதால், இந்த இயற்கையின் நீதியை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவது இல்லை. வயது நிலைக்கு ஏற்ப அவர் அவர்களுக்குள் இயங்கும் ஆற்றல் முயற்சிக்கு ஏற்ப, அவர் அவர்களுக்குள் அறிவாக செயல்படும் இறைநீதி. இவை அனைத்தையும் தற்சோதனை செய்து தன்னைத்தானே உணர வேண்டும்.
🌷 இன்றைய பண்புப்பயிற்சி
🌷 எதற்காக இந்த பூமிக்கு நாம் வந்தோம், என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிந்துகொண்டு, மாற்ற வேண்டியதை கட்டாயமாக மாற்றியே தீர வேண்டும். விலங்கின பதிவுகளை போக்கிக்கொண்டு ஆறாவது அறிவின் முழுமை பெற்று இறைநிலையை உணர்வதற்காக இந்த பிறவி அமைந்திருக்கிறது. இதுதான் பிறவியின் நோக்கம். இந்த நோக்கத்திற்கு தக்கவாறு நம் செயல் பண்புகளை அமைத்துக் கொள்வதே வாழ்வின் நோக்கம் ஆகும். நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு மனநிறைவோடு வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌷 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌷 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment