இன்று ஓர் இனிய தகவல் 25/07/2024 வியாழக்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁 மனவளக்கலை சொந்தங்களே அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹
தேவையற்ற விருப்பத்தை
விடுவது எப்படி?
ஜென், அருட்தந்தை, ஓஷோ.
தான் மிகவும் விரும்புவதை எப்படி விடுவது?
உணவு, காமம், சில தேவையற்ற செயல்கள்.
நீங்களாக பலவந்தமாக விடுவதற்கு முயற்சி செய்தால் அது விடாது. இன்னும் அதன் மேல் விருப்பமாகும்.
சரி எப்படி விடுவது?
ஓஷோ...
அனுபவித்து விடு. அதன் எல்லைக்கே போ. இவ்வளவுதான் இது என்று விழிப்புணர்வு வரும் போது தானாக அந்த விருப்பம் மறைந்து விடும். விட வேண்டும் என்ற விருப்பமும் வேண்டும் என்பார் ஓஷோ.
அருட்தந்தை :
Non veg மேல் அதிக விருப்பம்.பலவந்தமாக விட்டால் அதன் ஞாபகமாகவே இருக்கும்.
தியானம் மூலம் விழிப்புணர்வு வரும் போது, இது தேவையா என்று எண்ணம் எழுந்து இயல்பாகவே நம்மை விட்டு விலகும்.
ஏன் தங்கள் பயிற்சியில் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று நிபந்தனை இல்லை? என்று வெளிநாட்டவர் ஒருவர் கேட்டபோது அருட்தந்தை அதை அழகாக பதிலளித்தார்.
தானாக கனிவதை ஏன் தடி கொண்டு கனியவைக்க வேண்டும்?
வெளிநாட்டவர் பலர் தியானம் கற்ற சில காலத்திற்கு பிறகு " Swamiji இப்போது Red meat சாப்பிடுவதில்லை என்பார்கள். மேலும் அடுத்த முறை நான் அங்கு செல்லும் போது Swamiji இப்போது White meatம் உண்பதில்லை. Now I am a vegetarian என்பார்கள். இயல்பாக நடப்பதை அதன் போக்கிலேயே விட்டு விடலாம்." என்பார் அருட்தந்தை.
உண்மைதான். விட வேண்டும் என்ற உள்ளுணர்வு இருந்தாலும், விட முடியவில்லை என்றால் பலவந்தம் வேண்டாம்.
அதுவாகவே காலத்தால் சரியாகிவிடும்.
ஒரு ஜென் கதை:
ஜென் குருவை வீட்டுக்கு அழைத்திருந்தார்கள்.
அவருக்காக ஒரு பிரமாதமான விருந்து சமைத்திருந்தார்கள்.
சரியாகப் பன்னிரண்டு மணிக்குக் குருநாதர் வந்தார். எல்லோரும் அவர் காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றுக்கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் சமையல் பரிமாறப்பட்டது.
பார்த்துப் பார்த்துச் சமைத்திருந்ததை எல்லாம் குருநாதர் மிகவும் ரசித்துச் சாப்பிட்டார். வாய் விட்டுப் பாராட்டினார்.
கடைசியாகக் கை கழுவும் நேரத்தில் ‘எல்லாம் சைவமாச் செஞ்சிருக்கீங்களே. ஏன்?’ என்றார் அவர். ’ஒரு சின்ன துண்டு மீனாவது சேர்த்திருந்தா ரொம்ப நல்லாயிருந்திருக்கும்!’
அழைத்தவர்களுக்கு தூக்கிவாரிப்போட்டது. நீங்க அசைவமெல்லாம் சாப்பிடமாட்டீங்கன்னு நினைச்சோம்" என்றார்கள்.
குருநாதர் தலையைப் பிடித்துக்கொண்டார்.
உங்களோட முன்முடிவுகளுக்குள்ளே என்னைப் போட்டு அடைக்காதீங்க.
மூச்சு முட்டுது!’ என்றார்.
புரியலை குருவே! மத்த மனுஷங்க, மிருகங்க, செடி, கொடிகளுக்குக்கூடத் துன்பம் தரக்கூடாது, எதுக்காகவும் யாரையும் கொல்லக்கூடாது- என்று ஜென் சொல்லுதே.’
ஆமாம். அதுக்கும் நான் இப்போ
மீன் சாப்பிட நினைக்கறதுக்கும்
என்ன சம்பந்தம்?’ என்றார் குருநாதர்.
நாம நாமா இருக்கணும்.
நமக்கு எது இயல்போ அதைச் செய்யணும். பொய் வேஷம் போடக்கூடாது.
விட வேண்டும் என்ற எண்ணம்
உறுதியாக இருந்தால், காலப்போக்கில்
தேவையற்றவலிருந்து மீண்டு வந்து விடலாம்.என் அனுபவமும் கூட.
ஜென் சொல்லுதுங்கறதுக்காக வலுக்கட்டாயமா சைவத்தைமட்டும் சாப்பிட்டுட்டு உள்ளுக்குள்ளே புலம்பிகிட்டிருக்கறதைவிட ஆசைப்படும் போது அசைவம் சாப்பிட்டுடறதும், அந்த கணத்தில் வாழ்வதும் ஜென் தான்.
விட வேண்டும் என்ற உள்ளுணர்வு
உறுதியாக இருந்தால் போதும்.
இயல்பாக நடக்கும்.
வெற்றி நிச்சயம்
👍👍👍👍👍👍👍 வாழ்வை துவங்கு 👍வருவது எல்லாம் வசந்தமே* 🌺🌺🌺🌺🌺🌺🌺 வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக் செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.
Comments
Post a Comment