வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 23
⛳🌋⛳🌋⛳🌋⛳🌋⛳🌋⛳
🎲 இன்றைய நித்தியக்கடன்
🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎲 இன்றைய சாதகம்
🎲 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🎲 இன்றைய நற்சிந்தனை
🎲 சட்டவிரோதமாகவும், வன்முறையாகவும் எப்போதும் எங்கேயும் செயல்படாதீர்கள். அந்தந்த நாட்டு சட்டதிட்டங்கள் அந்த அந்த நாட்டில் மதிக்கப்பட வேண்டியவை ஆகும். இதனைத் தாண்டி இந்த செயல்கள் அனைத்தும் நம்மளுடைய உயிரின் உண்மை நிலை தன்மையை நிலைகுலையச் செய்து மாற்றி விடுகிறது. உயிருக்கு விரோதமாகவும், உயிருக்கு தீங்காகவும், உயிர் கருகும் படியாகவும், உயிரின் நறுமணம் மாறுகிறது ஆதலினால் அவ்வகையான செயல்களில் ஈடுபடாது, உங்களை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
🎲 இன்றைய தற்சோதனன
🎲 இயற்கையாக இருக்கும் இறைவனின் இயக்கம் முழுவதும் தூய்மையான சட்டமாகும் அதில் உடல் சட்டம், உயிர் சட்டம், என்று நிறைய இருக்கிறது. உடலுக்கு தேவையான அளவை முறையை மீறி உணவை உண்பது, உடல் சட்ட விரோதமாகும். முறையில்லாத எண்ணங்கள் மனதில் எழும் போதும் மீண்டும் மீண்டும் அவைகளுக்கு நம்மிடம் செயல் வடிவம் கொடுக்கும் போதும் அது உயிர் சட்டவிரோதமாகும். இதுபோன்றே உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐந்தில் அளவு முறை மீறும் போது இறைச்சட்ட சட்டவிரோதமாகும், வன்முறையாகும். மௌனத்தில் ஆழ்ந்து இதனை நன்றாக தற்சோதனை செய்து பாருங்கள், இதனுடைய பல உண்மைகள் உங்களுக்கே உள்ளுணர்வாய் விளங்கும்.
🎲 இன்றைய பண்புப்பயிற்சி
🎲 எதிலெல்லாம் இருந்து நாம் அளவு முறை கத்து எண்ணுகிறோமோ செயல் செய்கிறோமோ அவையெல்லாம் உயிருக்கு உகந்த செயல்களாகும். உயிருக்கு விரோதமில்லாத செயல்களில் நம்மை இணைத்துக் கொண்டு அத்தகைய சிறந்த பண்பில் நாம் உயர வேண்டும். தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பவிளைவு வராது தன்னுடைய எண்ணம், சொல், செயல் இந்த மூன்றையும் பயன்படுத்துவதே உயிருக்கு உகந்த செயல் பண்பாகும். இந்தப் பண்பில் நாளுக்கு நாள் சிறந்து ஓங்குவோம். வாழ்க வளமுடன்...
🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment