இன்று ஓர் இனிய தகவல் 17/07/2024 புதன்கிழமை

 இன்று ஓர் இனிய தகவல் 17/07/2024 புதன்கிழமை 🍁🍁🍁🍁🍁🍁🍁  மனவளக்கலை சொந்தங்கள் அனைவருக்கும் உற்சாகமான காலை வணக்கம் வாழ்க வளமுடன் 🌹🌹🌹🌹🌹🌹🌹                

 

வாழ்க்கை என்பது

                                   

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல.. மற்றவர்களின் மனதில் நீ வாழும் வரை.


நாம் தேவையில்லை என்று சிலர் நம்மை நினைக்க துவங்கும் முன் விலகி நிற்க கற்றுகொள்வது சிறந்தது.


ஆசை படுவதை மறந்து விடு. ஆனால் ஆசைப்பட்டதை மறந்து விடாதே..!மன நிறைவு என்பது இயற்கையாக நம்மிடம் உள்ள செல்வம்.. ஆடம்பரம் என்பது நாம் தேடி கொள்ளும் வறுமை.


சில நேரங்களில் தனிமை கடினம். சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்!.


மரணத்தை பற்றி கவலை படாதே.. நீ இருக்கும்வரை அது வரப்போவதில்லை.. அது வரும்போது நீ இருக்கபோவதில்லை


புரியாததை புரிந்து கொள்ளுங்கள். புரிந்ததை பகிர்ந்து கொள்ளுங்கள்.


வாழ்க்கை உன்னை எதிர்பாராத இடங்களுக்கு கூட்டிக்கொண்டு செல்லும். அன்புதான் உன்னை வீட்டுக்கு அழைத்து வரும்!


அறிவுரை தேவைப் படும் போதுதான் ஆணவம் கண்ணை மறைக்கும்..!


நீ நேசிக்கும் இதயத்தில் பல ஆண்டு காலம் வாழ்வதை விட உன்னை நேசிக்கும் இதயத்தில் சில நொடிகள் வாழ்ந்து பார் இதயத்தில் சுகம் தெரியும்.


விரும்புவதால் கருவறையில் மீண்டும் ஒருமுறை இடம் கிடைப்பதில்லை. வெறுப்பதால் கல்லறையும் நம்மை விட்டுவிட போவதில்லை. இருக்கும்வரை மகிழ்சியாக இருப்பபோம்..

                                  வெற்றி நிச்சயம் 

                                                                

👍👍👍👍👍👍👍                       வாழ்வை துவங்கு   👍வருவது எல்லாம் வசந்தமே*                                                    🌺🌺🌺🌺🌺🌺🌺           வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏அருள்நிதி.LIC.அசோக்   செய்யாறு மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை 944 369 1344.

Comments