வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 17
🏵️🕳️🏵️🕳️🏵️🕳️🏵️🕳️🏵️🕳️🏵️
🌾 இன்றைய நித்தியக்கடன்
🌾 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🌾 இன்றைய சாதகம்
🌾 சனிக்கிழமை காலை:- சாந்தி தவம் மாலை:- நித்தியானந்ததவம்.
🌾 இன்றைய நற்சிந்தனை
🌾 ஆன்மீகம் என்பது எல்லாவற்றிலும் அளவு முறையை பின்பற்ற கூடிய தெளிவான அறிவு பயிற்சி ஆகும். பொருள் சேர்க்கவோ, அருள் சேர்க்கவோ மட்டும் அல்ல ஆன்மீகம். அருள் என்றால் என்ன? பொருள் என்றால் என்ன? என்ற புரிதலே ஆன்மீகம். உடல் அறிவு, உயிர் அறிவு, இறை அறிவு என அனைத்தையும் உணரும் அறிவு ஆன்மீக அறிவாகும். ஆன்மீகம் ஒரு சாதனை மார்க்கமாக இருக்கவேண்டுமே ஒழிய அது வேறுமனே போதனை மார்க்கமாகவோ அல்லது வழிபாட்டு மார்க்கமாகவோமட்டும் இருந்துவிடக்கூடாது.
🌾 இன்றைய தற்சோதனன
🌾 ஆன்மீகம் என்பது இயற்கையின் ஒழுங்கமைப்பை மீறாமல் வாழும் முறை, வாழ்ந்து காட்வேண்டிய முறை. மற்றவர்களும் வாழ்வதற்கு உதவி செய்யும் முறையாகும். இதனை தெளிவாக உணர்ந்து கொள்ளாமல் தான், தனது என்ற குறுகிய அறிவுநிலையில் தன் நிலை மறந்து மாயையிலும், மயக்கத்திலும் தன்னை இழந்து இந்த மனித சமுதாயம் இப்பூமி மீது இருந்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்து தன் இயல்பான நிலைக்கு உயர பயிற்சியோடு கூடிய முயற்சியும். தெள்ளத் தெளிவான தற்சோதனையும் பேருதவியாக இருக்கும்.
🌾 இன்றைய பண்புப்பயிற்சி
🌾 சாதி, மதம், தேசம், பணம், புகழ், அதிகாரம், புலன் இன்பம் என நம்முடைய அறிவு சிக்கிக்கொண்டு சிதைவடைகிறது. இதிலிருந்து மீள்வதற்கான வழி முறைகளை அனைவரும் மதித்து அதன் வழி வாழ்க்கை வாழவேண்டும். ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கு நாம் முதல் அடி எடுத்து வைப்போம். இந்த தேசத்தின் எதிர்காலம் இவ்வுலகின் எதிர்காலம் நம்மிடையே கொடுக்கப்பட்டு இருப்பதை உணர்ந்து. நம் எண்ணம், சொல், செயல் பயன்படுத்தும் பண்பில் உயர்வோம், விரிவான மனோநிலையில் வாழ்வோம். வாழ்க வளமுடன்...
🌾 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🌾 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment