வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 14
🎑🌞🎑🌞🎑🌞🎑🌞🎑🌞🎑
🏮 இன்றைய நித்தியக்கடன்
🏮 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக. அனைவரும் வேதாத்திரி மகரிஷியின் 114,வது பிறந்தநாளை முன்னிட்டு உலக அமைதி விழா வாழ்த்துக்கள்
🏮 இன்றைய சாதகம்
🏮 புதன்கிழமை
காலை:- ஒன்பது மையம்,
மாலை:- நித்யானந்தம்.
🏮 இன்றைய நற்சிந்தனை
🏮 இந்த பூமியில் உயிரும் உடலுமாக நாம் இருக்கும் வரை நமக்கென்று சில பொறுப்புக்களும் கடமைகளும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. உயிரை மதித்து நாம் நம்முடைய செயல்கள் அனைத்தையும் ஒழுங்குபடுத்திக் கொண்டால், அதற்கு தகுந்த விளைவு என்பது கட்டாயம் நமக்கு அமைந்தே தீரும். உயிருக்குயிரான செயல்களிலிருந்து நம்மை சீர்திருத்தம் செய்து கொள்ளவேண்டிய ஒரு முழுமையான பிறவி இந்த மனிதப் பிறவி ஆகும். இந்த பிறவிக்கு தகுந்த செயல் பண்புகளில் நாம் நம்மை உயர்த்திக் கொள்வோம்.
🏮 இன்றைய தற்சோதனை
🏮 நம்முடைய பரு உடலுக்கு ஒரு எல்லை இருக்கிறது. ஆனால் உயிர் உடலுக்கும் காந்த உடலுக்கும் எல்லை என்பது கிடையாது. அது எல்லையற்ற நிலையில் விரிந்து இணைந்து அதுவாகவும் எதுவாகவும் மாறக் கூடிய பெரும் சிறப்புக்கு உரியது. இந்த சிறப்பினை நாம் முறையாக பயன்படுத்தி நம்முடைய வாழ்க்கையின் இன்னொரு பகுதிக்கு நம்மை நாம்தான் அழைத்துச் செல்ல வேண்டும். இன்பம் துன்பம் உணர்ச்சி என்ற நிலைகளை எல்லாம் கடந்து பேரின்ப நிலையோடு நிலைத்து வாழும் வாழ்க்கை அது.
🏮 இன்றைய பண்புப்பயிற்சி
🏮 மனம் பலவிதமான குணங்களில் இயங்கும் போது இந்த சிறப்புத்தன்மை சீராக சிறப்பாக அமைவதில்லை. மனதை ஒருமுகப்படுத்தி மனதால் மனதை உணர்ந்துகொண்டு அறிவை அறியக்கூடிய பெறும் முயற்சியில், தன்னை ஆர்வத்தோடு ஈடுபடுத்தி தன்னிலை விளக்கம் பெறக்கூடிய சிறப்புமிக்க வாழ்க்கை முறையாகும். இந்த வாழ்க்கையை நாம் வாழ்வதற்காகத்தான் இந்த மனித பிறவிக்கு வந்திருக்கிறோம். அறிவை அறிந்து கொள்ளும் இந்த முயற்சியில் நமக்கு பாதுகாப்பாக வழி நடத்தி நம்மை அழைத்துச் செல்வதற்காகவும் உருவாக்கப்பட்டதே வேதாத்திரியம். பயன்படுத்தி பயன் காண்போம், நாமும் நம் குடும்பமும், உலக மக்களும். வாழ்க வளமுடன்...
🏮 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🏮 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment