நித்தியக்கடன் ஆகஸ்ட் 13 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 13


🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐⛳🌐


🚥 இன்றைய நித்தியக்கடன்


🚥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🚥 இன்றைய சாதகம் 


🚥 செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🚥 இன்றைய நற்சிந்தனை 


🚥 மனதின் மதிப்பு என்னவோ அதை ஒட்டியே வாழ்க்கை அமைகிறது. இதிலிருந்து மாறியோ, மீறியோ  அமைவதற்கு வாய்ப்பே கிடையாது. மனதில் மதிப்பை உயர்த்திக் கொண்டு எல்லா வகையிலும் வாழ்க்கையை வெற்றிகரமாக வாழ்வோம். மனதில் எழும் எண்ணங்கள் கருமையத்தினுடைய பிம்பங்கள் முறையான பயிற்சியினால் கருமையத்தை தூய்மை செய்து கொள்ள முடியும். மேலும் நல்ல எண்ணங்களை வளுப்படித்துக் கொண்டும் தீய எண்ணங்களை முறைபடுத்திக் கொள்ளவும் முடியும்.


🚥 இன்றைய தற்சோதனை


🚥 உங்களுடைய சின்ன சின்ன செயல்களை, எண்ணங்களை, வார்த்தைகளை ஆய்வு செய்யுங்கள் உற்று கவனித்து பாருங்கள். மனதின் மாண்பினை மனதையே உணரச் செய்யுங்கள் மனதிற்கு ஓய்வு கொடுங்கள் மனம் கொஞ்சம் எடுக்கட்டும். ஓய்வு..! ஓய்வு..! ஓய்வு...! நீங்கள் யாரென்று உங்களுக்கு புரியும். தற்சோதனை ஒன்றே நம் வாழ்வை வெளுச்சத்தை நோக்கி நகர்த்தும். விழிப்பு நிலையில் எப்போதும் உங்களை தக்க வைத்துக் கொள்ளுங்கள்.


🚥 இன்றைய பண்புப்பயிற்சி


🚥  விழிப்புநிலை:- 1: உடல்நலம் கெடும் எந்தக் காரியத்திலும் ஈடுபடலாகாது.


🚥 விழிப்புநிலை:- 2: எழுதப்பட்ட, எழுதப்படாத சமுதாய நியதிக்குக் கட்டுப்படுவது.


🚥 விழிப்புநிலை:- 3: ஒவ்வொரு அசைவையும் இயற்கைக்கு இசைவாகப் பார்த்துக்கொள்வது.


🚥 எனவே, எண்ணம், சொல், செயலில் விழிப்பு நிலை வேண்டும். அதுவும் அயரா விழிப்புநிலை வேண்டும். நம்மை நாமே தொடர்பு கொள்ளும் போதும்,  சமுதாயத்தை தொடர்பு கொள்ளும் போதும் நமக்கு துயரம் எழாது காத்துக் கொள்வதே "விழிப்பு நிலை". வாழ்க வளமுடன்...   


🚥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🚥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments