வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 09
🎍⛳🎍⛳🎍⛳🎍⛳🎍⛳🎍
🫐 இன்றைய நித்தியக்கடன்
🫐 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🫐 இன்றைய சாதகம்
🫐 வெள்ளிகிழமை காலை, மாலை இரண்டு வேளையும் சாந்தி தவம்.
🫐 இன்றைய நற்சிந்தனை
🫐 மழை, ஆறு, அருவி, குளம், கிணறு இவை அனைத்திலும் இருப்பது பொதுவாக நீர்தான். ஆனால் இந்த அனைத்திலும் ஒரே வகையான நீர் தான் இருக்கிறதா? என்றால் இல்லை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான தன்மையும் தரமும் இருக்கிறது. இந்த தன்மையும் தரமும் எதனால் அமைகிறது என்றால், அவற்றுள் இருக்கும் அணுகளின் கூட்டு இயக்கத்திற்கு தகுந்தார் போல தன்மையும் தரமும் மாறுபடும். அணுக்களின் வேறுபட்ட தன்மைகள் தான் இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் வளர்ச்சியுமாக இருக்கிறது. அது மட்டுமின்றி உயிரினங்களிலும் இதே விஞ்ஞானம் பெரும்பங்கு வகிக்கிறது.
🫐 இன்றைய தற்சோதனை
🫐 ஓரறிவு முதல் ஆறறிவு வரை எல்லா உயிரினங்களுக்கும், ஏற்படக்கூடிய குணநலன்களுக்கும், அறிவின் ஏற்றத்தாழ்வுகளுக்கும் இந்த அணுக்களின் கூட்டியக்க அமைப்பே மூலகாரணமாகும். அணுக்களின் இயக்கங்களுக்கு ஏற்ப உடலில் ரசாயன மாற்றங்கள் ஏற்படும். இதன் விளைவாக மனதில் எண்ணங்களில் பலவிதமான பண்புகள் உருவாகும். அவைகள் நம் கருமையத்திற்கு பொருத்தமானதாக இருந்தால், உடல் ஆரோக்கியமாகவும் மனோபலமாகவும் உணருகின்றோம். ஐந்தறிவு ஜீவன் வரை இந்த அணு கோட்பாடும், இயக்கமும், அமைப்பும் அதனதன் கருமையத்திற்கு பொருத்தமானதாகவே இருக்கும். ஆனால்...
🫐 இன்றைய பண்புப்பயிற்சி
🫐 ஆறாவது அறிவு கொண்ட மனித இனத்திற்கு தன்னைத் தானே உணர வேண்டிய பொறுப்பும், கடமையும், சிறப்பும் இருப்பதனால் இந்த ஆறாவது அறிவின் வழியாக மனிதர்களின் செயல்களும் சிந்தனைகளும் சுதந்திரமானதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக பொருத்தமான அணுக்களின் அமைப்பில் மட்டுமே மனித இனம் வாழ முடியும். அதற்கு எதிர்மறையான தன்மைகளில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்வதற்கும், மேலும் பொருத்தமான தன்மையிலும் தரத்திலும் உயர்த்திக் கொள்வதற்கும், உரிய பண்பினை ஒவ்வொரு மனிதனும் வளர்த்துக் கொள்ளவேண்டும். அவைகளை இனம்கண்டு வாழும் முறையைத்தான் வேதாத்திரியம் வகுத்துத் தருகிறது. வாழ்க வளமுடன்..
🫐 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🫐 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment