நித்தியக்கடன் ஆகஸ்ட் 06 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

ஆகஸ்ட் 06


🍂❄️🍂❄️🍂❄️🍂❄️🍂❄️🍂


🏝️ இன்றைய நித்தியக்கடன்


🏝️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🏝️ இன்றைய சாதகம் 


🏝️ செவ்வாய்கிழமை 

காலை:- துரியாதீததவம், 

மாலை:- இறைநிலை தவம்.


🏝️ இன்றைய நற்சிந்தனை 


🏝️ இந்த பூமியில் தான் உப்பும் கிடைக்கிறது, வைரமும் கிடைக்கிறது. பூமியின் மேற்பரப்பில் சேருகின்ற படிமம் உப்பாகவும், பல்வேறு தாதுக்களாகவும், பூமியின் அடி ஆழத்தில் சேருகின்ற படிமம் வைரமாகவும், பல்வேறு கற்களாகவும் உருபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு ரசாயனமும், வெப்பமும், காலமும் தேவைப்படுகின்றன. எந்த ஒரு நிகழ்ச்சியும் பூமியின் மேற்பரப்பில் அல்லது அடி ஆழத்திலும் சரி, இந்த பூமியில் வாழும் உயிர்களின் வாழ்க்கையிலும் சரி, உடனடியாக எந்த ஒரு மாற்றமும் நடை பெறுவது இல்லை. அது அதற்கு தகுந்த காலத்தை எடுத்துக்கொள்கிறது.


🏝️ இன்றைய தற்சோதனை


🏝️ நம்முடைய உடலிலும் இதே நீதி பொருந்தும். எந்த ஒரு மாற்றமும் காலத்தால் நிச்சயமாக நிகழும், அதுவரையில் நாம் பொறுமையோடு இருந்து பயிற்சிகளை நம்பிக்கையோடு செய்து, சிறப்பான அந்த கால நிலையை வாழ்த்திக்கொண்டே வாழ்வோம். செயலுக்குத் தக்க விளைவு அமைந்தே தீரும் ஒரு நாளும் ஒரு பொழுதும் இது மாறப்போவது இல்லை நம்பிக்கையோடு திட்டமிட்டுக் கொண்டு நம்முடைய வாழ்வை நிதானமாக முயற்சிகளை செய்து கொண்டே இருப்போம்.


🏝️ இன்றைய பண்புப்பயிற்சி


🏝️ செயலுக்குத் தக்க விளைவு என்பது நிச்சயமாக உண்டு. இந்த செயலுக்கு என்ன விளைவு என்பது அவரவர் வினைத் தன்மையைப் பொறுத்து அமைகிறது. இந்த நீதியை உணர்ந்து நல்ல செயல்களை அதாவது ஞானச் செயல்களை செய்து ஞான விளைவுகளான அறிவுசார்ந்த சிந்தனைகளையும் செயல்களையும் உருவாக்குவோம் புதியதோர் பண்பாட்டை பறை சாற்றுவோம். வாழ்க வளமுடன்...    


🏝️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🏝️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 


      🌸வாழ்க வையகம்🌸

   🍁வளர்க வேதாத்திரியம்🍁

      🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments