வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
ஆகஸ்ட் 05
🍄🕳️🍄🕳️🍄🕳️🍄🕳️🍄🕳️🍄
🍥 இன்றைய நித்தியக்கடன்
🍥 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🍥 இன்றைய சாதகம்
🍥 திங்கட்கிழமை
காலை:- கண்ணாடிப் பயிற்சி,
பஞ்சேந்திரிய தவம்,
மாலை:- நித்யானந்த தவம்.
🍥 இன்றைய நற்சிந்தனை
🍥 நினைவுகளே நம்மை வழிநடத்துகிறது, நினைவுகளே நமக்கு வழிகாட்டுகிறது, நினைவுகளே நமக்கு முன்னே நின்று நம்மை வசீகரிக்கிறது, நினைவுகளினுடைய இந்த கபடநாடகம் புரியாமல் நாமும் அதற்குள் சிக்கிக் கொள்கிறோம். நம் வாழ்க்கைப் பயணமானது நிமிடத்திற்கு நிமிடம் மாற்றி அமைக்கிறது. தாறுமாறாக இழுத்துச் செல்கிறது. ஐம்பொறியறிவும், ஐம்புலனறிவும் மட்டுமே நமக்கு நடைமுறையில் இருக்குமேயானால் இந்த நினைவுகளிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்வது சற்று கடினம்தான்.
🍥 இன்றைய தற்சோதனை
🍥 மனோவலிமையோடும், வைராக்கியத்தோடும் நாள்தவராது தவம், உடற்பயிற்சி, தற்சோதனை, காயகல்பம் செய்துவர நமக்குள் பெறுகும் சிறப்புத் தன்மைகள், புலன்களை கடந்த ஞான அறிவு, இதனைப் பயன்படுத்தி இந்த நினைவுகளை வடிகட்டி விடலாம். விருப்பு, வெறுப்பு இல்லாமல் இயற்கையின் அனைத்து அமைப்போடும், இணக்கத்தன்மை யோடும் வாழும் பண்பினால் உயர்ந்தால் மட்டுமே இந்த மானுடம் தன்னைத்தானே வெல்ல முடியும்.
🍥 இன்றைய பண்புப்பயிற்சி
🍥 மாய மயக்க பிறவி தொடரிலிருந்து, தன்னைத்தானே விடுவித்து கொள்வதற்காகவே இந்த மனிதப் பிறவி இப்பிரபஞ்சத்தில் தோன்றியது. ஆகவே நம்மால் முடியாது என்று இந்த பிரபஞ்சத்தில் எதுவுமே கிடையாது. முழுமனதுடன் முயற்சிப்போம். வாழ்க வளமுடன்...
🍥 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🍥 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம். நாளையும் தொடரும்.
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment