வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 31
🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️♻️🕳️
🪻 இன்றைய நித்தியக்கடன்
🪻 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🪻 இன்றைய சாதகம்
🪻 வெள்ளிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:-
🪻 இன்றைய நற்சிந்தனை
🪻உயிரினுடைய இயக்கமானது நம் உடலில் நம்முடைய பல்வேறு செயல்களால் பல்வேறு நிலைகளில் இயங்குகிறது. உயிர் துகள்களின் தற்சுழற்சி மற்றும் வேக ஓட்டம் இவையெல்லாம் நமது உணவு, உழைப்பு, உறக்கம், உடலுறவு, எண்ணம் இந்த ஐவகையான முறையான செயல்களால் சீராக இயங்குகிறது. முறைதவறிய செயல்களால் இதனுடைய இயக்க ஒழுங்கையும் கட்டமைப்பும் சிதைக்கப்படுகிறது. மேலும் இதன் விளைவாக நாம் உடலில் நோயும், மனதில் குழப்பமும், வாழ்க்கையில் சிக்கல்களையும் உருவாக்கிக் கொள்கிறோம்.
🪻 இன்றைய தற்சோதனை
🪻 மனிதர்களுக்கு எதிர்காலத்தை யூகம் செய்து கொண்டு, அதற்கு ஏற்றார் போல நிகழ்காலத்தில் சீர் திருத்தங்களை செய்து கொள்ளக்கூடிய, சிறப்பான அமைப்பு இருக்கிறது. இந்த சிறப்பு இன்னும் மனிதர்களுக்குள் சரியாக பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதுதான் உண்மை. அகத்தவப் பயிற்சியினால் மனம் உயிரை கவனிக்க கவனிக்க, உயிருக்கும் மனதுக்குமான இணக்கத்தன்மை உருவாகும். இதன் விளைவாக தனக்குள் இருக்கும் சிறப்பான அமைப்பை வெளிப்படுத்திக் கொண்டு வாழ முடியும்.
🪻 இன்றைய பண்புப்பயிற்சி
🪻 நல்ல எண்ணம், செயல், வார்த்தை நம்மை எப்போதும் தூய்மையான நிலையில் உயர்த்திக் கொண்டே இருக்கும் பண்பு இவைகள்தான். இறைவனை நமக்குள் உணர்ந்து கொள்வதற்கான அடித்தளத்தை நம்முடைய மூளை செல்களிலும் கருமையத்திலும் உருவாக்குகிறது. உதாரணத்திற்கு பேரியக்க மண்டலத்தில் உள்ள வான் காந்தம் என்பது செயற்கை கோள் (satellite) போல நம்முடைய மூளை உள்வாங்கியாக(receiver) இருந்து உள்ளுணர்வு சிந்தனையாகவும், செயல்களாகவும், எண்ணங்களாகவும் மலரச் செய்கிறது. வாழ்க வளமுடன்...
🪻 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🪻 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment