நித்தியக்கடன் மே 27 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 27


🎲♾️🎲♾️🎲♾️🎲♾️🎲♾️🎲


♦️ இன்றைய நித்தியக்கடன்


♦️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♦️ இன்றைய சாதகம்


♦️ திங்கட்கிழமை 

காலை:- கண்ணாடிப் பயிற்சி, பஞ்சேந்திரிய தவம், 

மாலை:- நித்யானந்த தவம்.


♦️ இன்றைய நற்சிந்தனை

  

♦️ எந்த ஒன்றையும் வெறுக்காதீர்கள் உங்களுக்கு நேர் எதிர்மறையாக இருக்கும் பொருளாக இருந்தாலும், நபராக இருந்தாலும், அதனை வெறுக்காதீர்கள். இந்த பிரபஞ்சம் முழுவதிலும் நம்முடைய சீவ காந்த அலை வான்காந்த அலையோடும், பிரபஞ்ச நிலைகளோடும் மோதுகிறது, சிதறுகிறது, ஊடுருவுகிறது, பிரதிபலிக்கிறது, இரண்டுக்கும் இடையே ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்வாறாக இயங்கும் காந்த ஆற்றலும் அதனுடைய மதிப்பும் அளவிட முடியாதது. வெறுப்பு தன்மை முதலில் நம்முடைய உடலையும், மனதையும், உயிரையும் பாதிக்கிறது. அதற்குப் பின்புதான் அந்தப் பொருள் மீதும், அந்த நபர் மீதும் விளைவை ஏற்படுத்துகிறது.


♦️ இன்றைய தற்சோதனை


♦️ சமயம், சாதி, மதம், இனம், மொழி, தேசம் உங்களுக்குள் இருக்கும் வினை பதிவுகள், உறவுகள், இவைகளை வெறுகிறீர்கள் அல்லது நேசிக்கிறீர்கள் என்றால், ஒன்றின் மீது அழுத்தமான பற்று இருக்கும் போது மற்றொன்றை இயல்பாகவே நீங்கள் வெறுக்க துவங்கிவிடுவீர்கள் இதுதான் உண்மை. எந்த ஒன்றின் மீதும் கடும் பற்று கொள்ளாதீர்கள். இயல்பாக இருந்து அனைத்து நிலைகளையும் தனதாக்கிக் கொண்டு தற்சோதனை செய்து, இயல்பாக வாழ்வதற்கும் செயல்புரிவதற்கும் முயற்சி செய்யுங்கள். வெற்றிகரமான வாழ்க்கைக்கு இது ஒன்றே சிறப்பான வழிமுறையாகும்.


♦️ இன்றைய பண்புப்பயிற்சி


♦️ விடியலை நோக்கி நாம் நகர்கிறோம், அந்நகர்வுகளை மற்றவர்களுடைய பார்வைக்காக உண்மை நிலை தன்மையை மறைத்து, உங்களை நீங்கள் இழந்து செயலாற்றுவதும் வாழ்வதும் உயிருக்கு உங்களுடைய பிறப்புக்கு பொருந்தாத செயலாகும். தர்மத்தை, நியாயத்தை, சத்தியத்தை காத்துக் கொண்டு அதனோடு பயணிப்பது தான் பிறப்புக்கு சிறப்பான தளத்தை உருவாக்கிக் கொடுக்கும். இந்த மனிதப் பிறவிக்கு உகந்த செயல் பண்பில் எல்லா வகையிலும், எல்லா நிலையிலும் சிறந்து விளங்குவோமாக. வாழ்க வளமுடன்...


♦️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♦️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments