வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 25
🧿🪶🧿🪶🧿🪶🧿🪶🧿🪶🧿
🔶 இன்றைய நித்தியக்கடன்
🔶 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔶 இன்றைய சாதகம்
🔶 சனிக்கிழமை
காலை:- சாந்தி தவம்
மாலை:- நித்தியானந்ததவம்.
🔶 இன்றைய நற்சிந்தனை
🔶 வளமான மண், வீரியமான விதை, அளவான நீர், வெப்பம், காற்று இவை எல்லாம் ஒன்று சேர்ந்து கூடி இயங்கும்போது அந்த நிலத்தில் விதைக்கப்பட்ட விதை முளைத்து எழுகிறது. இந்த அனைத்தும் ஒன்று சேர்ந்தால் தான் ஒரு விதையை முளைக்க வைக்க முடியும். சரியான விகிதாச்சாரத்தில் இவையெல்லாம் அமைந்திருக்க வேண்டும். அவ்வாறாக இருக்கும் போது எதிர்காலத்தில் ஆரோக்கியமான மரம் நமக்கு கிடைக்கிறது. பலவகையில் அது பயன்படுகிறது.
🔶 இன்றைய தற்சோதனை
🔶 ஒவ்வொரு மனிதனும் தனக்கு அமைய வேண்டியவைகள் அனைத்தையும் அமைத்துக் கொண்டால், அந்த மனிதன் வாழ்க்கை விருட்சமாகும். அவை நட்பு, கல்வி, தொழில், நற்பண்புகள், சமுதாய ஒத்துழைப்பு, உடல், அறிவு, மனம், உயிர் இவைகளை உயர்த்து வதற்கான பயிற்சி முறை இவை அனைத்தையும் சரியாக ஒரு மனிதன் அமைத்துக்கொண்டால், அந்த மனிதன் அவர் சார்ந்த குடும்பமும் சமுதாயமும் அனைத்தும் நன்மை பெறும். இவைகளை உயர்த்திக் கொள்வதற்கான சிந்தனையில் உங்களை ஆழ்த்திக் கொண்டு தற்சோதனை செய்து பாருங்கள் உண்மை விளங்கும்.
🔶 இன்றைய பண்புப்பயிற்சி
🔶 கண்ணுக்கு புலப்படுகின்ற விஷயங்களையும் மனதிற்கு மட்டும் புரியும் விஷயங்களையும், சரியான புரிதலோடு வாழ்க்கையை எப்போதும் அமைதியாக வாழ வேண்டும். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய். உங்களை நீங்களே விசாரியுங்கள், உங்களுக்கு உள்ளும் புறமும் இருப்பது என்ன என்று கண்டுபிடியுங்கள். தன்னை தானே கண்டறியும் பண்பில் உலக மக்கள் அனைவரும் உயர்வு காண்போம். வாழ்க வளமுடன்...
🔶 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔶 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment