நித்தியக்கடன் மே 23 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 23


🌀🪴🌀🪴🌀🪴🌀🪴🌀🪴🌀


🎲 இன்றைய நித்தியக்கடன்


🎲 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🎲 இன்றைய சாதகம்


🎲 வியாழக்கிழமை 

காலை:- தீபப்பயிற்சி, துரியதவம், 

மாலை:- இறைநிலைதவம்.


🎲 இன்றைய நற்சிந்தனை

  

🎲 எந்த வகை வாகனமாக இருந்தாலும், சாலைகளில் திருப்பம் வரும் போது, வாகனத்தின் வேகத்தை குறைத்து திரும்பினால், விபத்து இல்லாத பயணமாக அது அமையும். மாறாக நெடுஞ்சாலையில் செல்லக்கூடிய வேகத்திலேயே, திருப்பங்களில் திரும்பினால் கட்டாயம் விபத்து உறுதி. ஒருவகையில் வாழ்க்கையும், வாழ்க்கை பயணமும் இது போலத்தான்.


🎲 இன்றைய தற்சோதனை


🎲 பலவிதமான திருப்பங்கள் உடையது நம்முடைய வாழ்க்கை பயணம். வேகத்தை குறைத்து நிதானமாக திருப்பங்களை சந்திக்க வேண்டும். வேகமும் விவேகமும் வாழ்க்கையில் மிகவும் கவனத்தோடு கையாள வேண்டிய ஒன்று. எல்லா நேரங்களிலும் எல்லா காலங்களிலும் திட்டமிட்டுக் கொண்டு வாழ்க்கைப் பயணத்தில் பயணிக்கவேண்டும். கால சூழ்நிலைகளுக்கேற்ப நம்முடைய திட்டங்களையும் சிறந்த நல்ல முறையில் உயர்த்திக்கொண்டு, முறை தவறாமல் நெறி பிறழாமல் வாழவேண்டும்.


🎲 இன்றைய பண்புப்பயிற்சி


🎲 அயரா விழிப்பு நிலையோடு நம்மை நாமும், நம்மை சுற்றியுள்ள சூழ்நிலைகளையும், கவனத்தோடு கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும். அஜாக்கிரதையாக இருந்துவிடக்கூடாது. சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் திசையை திரும்பலாம். வாழ்க்கையின் நெளிவு சுளிவுகளை கற்றுக்கொண்டு வாழ்வதற்கு பெயர்தான் ஆன்மீக வாழ்வாகும். இந்த வாழ்க்கை முறையை பின்பற்றி நாமும் நம் குடும்பமும் நலமும் வளமும் பெறுவோம். வாழ்க வளமுடன்...


🎲 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🎲 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯

Comments