நித்தியக்கடன் மே 22 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 22


🪷♻️🪷♻️🪷♻️🪷♻️🪷♻️🪷


🛟 இன்றைய நித்தியக்கடன்


🛟 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


🛟 இன்றைய சாதகம்


🛟 புதன்கிழமை 

காலை:-  ஒன்பது மையம், 

மாலை:- நித்யானந்தம்.


🛟 இன்றைய நற்சிந்தனை

  

🛟 வேதாத்திரி மகரிஷி அவர்கள் அளவு முறையை பற்றி நிறைய இடங்களில் பேசி இருக்கிறார்கள். அளவு என்றால் என்ன..? முறை என்றால் என்ன..? எந்த ஒரு பொருளோடும் தொடர்பு கொள்ளும் போது நாம் கடைபிடிக்க வேண்டியது அளவு. எந்த ஒரு நபரோடும் தொடர்பு கொள்ளும் போது நாம் கடைபிடிக்க வேண்டியது முறை. "அளவு"என்பது தனிநபர் சார்ந்தது. "முறை" என்பது கூட்டமைப்பை சார்ந்தது. இருவேறு பட்ட நபர்கள் ஒரு சூழ்நிலையில் இணைந்துக் கொண்டு செயல்படும் போது. பின்பற்ற வேண்டியது முறையை.


🛟 இன்றைய தற்சோதனை


🛟 முறை என்றால் என்னவென்று இன்னும் கொஞ்சம் விரிவான உதாரணங்களோடு பார்க்கலாம்.

முறையை பின்பற்றும் போது அதில் பலருடைய உணர்வுகள், சூழ்நிலைகள், பலதரப்பட்ட பழக்க வழக்கங்கள், இவை அனைத்தையும் சிந்தித்து மதித்து செயலை செய்ய வேண்டும். யாருக்கும் துன்பம் எழாதவகையில் அமைத்துக் கொள்ள வேண்டும்.  மற்றவர்களுடைய உணர்வை, சிந்தனையை நாம் மதிக்கும்போது அங்கு தானாக முறை என்பது அமைந்துவிடும். இதனை புரிந்து கொள்ளாமல் அவர்களிடமும் நம் எண்ணத்தை திணிக்கும்போது. முரண்பாடுகள் உருவாக்கும் பிணக்குகள் உருவாகும். இது இருவர் வாழ்விலும் மிகப்பெரிய கேட்டினை விளைவித்து விடும். தற்சோதனை ஒன்றே இந்த தெளிவான மனநிலைக்கு நம்மை உயர்த்தும் படித்தளமாகும்.


🛟 இன்றைய பண்புப்பயிற்சி


🛟 ஒரு வருடைய வயது, உடலுழைப்பு, தேவை, பருவகால சூழல், மாற்றம் இவை அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான். பசி, தாகம், தேவை, உணர்வு, சிந்தனை, செயல் தூண்டல் இவை யெல்லாம் உருவாகிறது. இந்த உண்மையை மறுப்பதற்கோ, மறப்பதற்கோ எதுவுமே இல்லை. மறந்தாலும், மறுத்தாலும் துன்பத்தில் சிக்கிக்கொளும் முதல் நபர் நாமாகத்தான் இருப்போம். அடுத்து குடும்பத்தையும், நட்பு வட்டத்தையும் பாதிக்கும். ஆகவே இறைநீதியை, இயற்கையின் சட்டத்தை மதித்து, அதை மறவாமல் நினைவில் வைத்துக் கொள்ளும் பண்பில் உயர்வோம். இந்தப் பண்பே பிறவிப்பயனை நல்குவதற்கான ஒரே வாய்ப்பாகும். வாழ்க வளமுடன்...


🛟 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


🛟 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments