வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 19
💦🏮💦🏮💦🏮💦🏮💦🏮💦
🔰 இன்றைய நித்தியக்கடன்
🔰 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🔰 இன்றைய சாதகம்
🔰 ஞாயிற்றுகிழமை
காலை:- பஞ்சபூத நவக்கிரக தவம்
மாலை:- இறைநிலை தவம்.
🔰 இன்றைய நற்சிந்தனை
🔰 நாம் அனைவரும் இந்த பிரபஞ்சவெளியில் மிதந்து, உருண்டு, சுழன்று கொண்டிருக்கும் பூமிப் பந்தின் மீது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கை முழுக்க முழுக்க இயற்கையை சார்ந்தது. பூமிக்கும் நமக்குமான நேரடியான தொடர்பு நிறைய இருக்கிறது. உதாரணத்திற்கு இந்த பூமி 72 பங்கு நீரால் நிரப்பப்பட்டு இருக்கிறது, 28 பங்கு நிலப் பகுதியாகவும் இருக்கிறது. இந்த மனித சரீரமும் 72 பங்கு நீர்மப் பொருளாலும், 28 பங்கு கெட்டிப் பொருளாலுமானது.
🔰 இன்றைய தற்சோதனை
🔰 மேலும் நம்முடைய மனித உடல் முழுக்கமுழுக்க பஞ்ச பூதங்களின் கூட்டு கலவையாகும். பஞ்சபூதங்களில் இருந்து நம் உடலை ஒருநாளும் பிரித்து சிந்திக்கவே முடியாது. இயற்கையிலிருந்து நாம் வேறுபட்டவர்கள் அல்ல, இயற்கையும் நாமும் ஒன்றுதான், என்ற சிந்தனைக்கு இன்னும் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. அகத்தவத்தாலும் தற்சோதனையாலும் அவைகள் அனைத்தையும் தெளிவாக புரிந்துகொள்ள நாம் முயற்சிக்க வேண்டும்.
🔰 இன்றைய பண்புப்பயிற்சி
🔰 இந்த உண்மைகளை எல்லாம் நாம் உணர்ந்து கொண்ட மனோநிலையில், நமக்கான பொறுப்பையும் கடமையையும் நமக்குள் இருக்கும் இறைநிலை, நம்முடைய எண்ணமாகவும் செயல்களாகவும் நம்முள் மலரச் செய்யும். இந்த வாழ்க்கை முறையைத்தான் ஞான வாழ்க்கை என்றும், அகத் தெளிவோடு வாழும் முறை என்றும், நாம் உணருகின்றோம். இந்த பூமிக்கும் நமக்குமான நெருக்கம் எல்லா வகையிலும், நம் வாழ்க்கையோடு இணைக்கப்பட்டு எப்போதும் நம்முடைய வாழ்வாகவே, நம்மை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறது, என்ற உண்மையை உணர்வோம். வாழ்க வளமுடன்...
🔰 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🔰 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment