நித்தியக்கடன் மே 18 2024

 வாழ்க வையகம்

வளர்க வேதாத்திரியம்

வாழ்க வளமுடன்

நித்தியக்கடன்

மே 18


🔶♾️🔶♾️🔶♾️🔶♾️🔶♾️🔶


♻️*இன்றைய நித்தியக்கடன்*


♻️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.


♻️ இன்றைய சாதகம்


♻️ சனிக்கிழமை 

காலை:- சாந்தி தவம் 

மாலை:- நித்தியானந்ததவம்.


♻️ இன்றைய நற்சிந்தனை

  

♻️ சஞ்சித கர்மம், பிராரப்த கர்மம், ஆகாமிய கர்மம் என்று கர்மவினைகளை மூன்று விதமாக முன்னோர்கள் பிரித்துள்ளனர். இவற்றில் சஞ்சித கர்மம் மிகவும் வலிமையானது. அதை கடப்பது அவ்வளவு எளிது அல்ல, என்று ஒரு பயமுறுத்தும் விளக்கமும் கூடவே பதிவு செய்யப் பட்டிருக்கிறது. பிராரப்த கர்மத்துக்கு கட்டுப்பட்டது, சஞ்சித கர்மம் ஆகும். நாம் செய்யக்கூடிய நல்ல பல செயல் பதிவுகள் சஞ்சித கர்மம் தரத்தை தன்மையை மாற்றி அமைக்கும் வல்லமை வாய்ந்தது.


♻️ இன்றைய தற்சோதனை


♻️ நாம் யார்? நாம் வாழ வேண்டிய முறை என்ன? என்ற தெளிவான சிந்தனையோடு மனசாட்சியை மதித்து நம்முடைய செயல்பாடுகள் அனைத்தையும் அமைத்துக் கொண்டு, வாழ்க்கையை முழுமையாக வாழும் போது சஞ்சித கர்மத்தின் வலிமையை சிறுக சிறுக தரம் மாற்றி அமைத்து விடலாம். ஒவ்வொரு வாழ்க்கை சூழ்நிலைகளையும் தற்சோதனை செய்து கொண்டு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நல்லொழுக்க பண்போடு வாழ துவங்கி விட்டால் எல்லாவகையான சிக்கல்களும் குழப்பங்களும் முடிவுக்கு வந்துவிடும் அது என்னவெனில்.


♻️ இன்றைய பண்புப்பயிற்சி


♻️ தனக்கோ, பிறருக்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ, நம் எண்ணம், சொல், செயல் இவை வழியாக துன்ப விளைவு ஏற்படாமல் வாழ்வதே ஆகும். இவ்வாறு வாழும்போது இதனுடைய பலன் என்னவென்றால் உடல் உடலாக, உயிர் உயிராக, மனம் மனமாக இயங்கும். இந்த ஒட்டுமொத்த கூட்டு இயக்கம் இறைவனை உணர்ந்து கொள்ளக்கூடிய வலிமையை உருவாக்கும். ஞானமும் வாழ்வும் என வாழ்க்கை சிறப்பு நிலைக்கு உயரும் "உன்னுள்ளே நானடங்க என்னுள்ளே நீ விளங்க இன்ப ஊற்றாய் அறிவாய் எங்கும் பராபரமே" வாழ்க வளமுடன்...


♻️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.


♻️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯


          🌸வாழ்க வையகம்🌸

    🍁வளர்க வேதாத்திரியம்🍁

          🌸வாழ்க வளமுடன்🌸


☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯ 

Comments