வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 17
☄️🪶☄️🪶☄️🪶☄️🪶☄️🪶☄️
❄️*இன்றைய நித்தியக்கடன்*
❄️ அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
❄️ இன்றைய சாதகம்
❄️ வெள்ளிகிழமை
காலை, மாலை இரண்டு
வேளையும் சாந்தி தவம்.
❄️ இன்றைய நற்சிந்தனை
❄️ இறுகிப்போன நிலத்திற்குள் நீர் ஊடுருவி செல்வதற்கு சில காலம் பிடிக்கும். அதே நிலம் தளர்வாக இருந்தால் அந்த நிலத்தில் சுலபமாக நீர் ஊடுருவும். இதுபோலத்தான் மனதை இறுக்கமாக வைத்திருக்காதீர்கள். இறுக்கமான மனதில் இறை நிலை ஊடுருவ மிகுந்த சிரமமும், நீண்ட காலம் ஆகிறது. ஆகவே மனதை எப்போதும் தளர்வாக வைத்துக் கொள்ளுங்கள். "relax your body, relax your mind"
❄️ இன்றைய தற்சோதனை
❄️ புலன் வழியாக எதையெல்லாம் நாம் உணர்கிறோமோ அதை எல்லாம் மேலோட்டமாக சிந்தித்து, புரிந்து, கொண்டு விட்டுவிடாதீர்கள். அதனுடைய ஆழம், அகலம், நீளம், அனைத்தையும் தற்சோதனை செய்து விளங்கிக் கொள்ளுங்கள். இந்த விளக்கத்துக்கு பின்னால்தான் அறிவின் முழுமைப்பேறு துவங்குகிறது. மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது.
❄️ இன்றைய பண்புப்பயிற்சி
❄️ சிந்தனை வழியாகத்தான் நம்மை திருத்திக் கொள்ள முடியும். சிந்திக்க சிந்திக்கத்தான் நம்முடைய செயல் தூய்மை, மனத்தூய்மை, உயிர் தூய்மை, உடல் தூய்மை அனைத்தையும் ஒழுங்கமைத்துக் கொள்ள இயலும். சிந்தித்து செயல்படுங்கள். இந்த சிந்தனை பண்பு வாழ்க்கையில் நம்மை நமக்கான நிலைபேற்றில் நிலை நிறுத்த வல்லது. சிந்தனை பண்பே நாமாவோம். வாழ்க வளமுடன்...
❄️ குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
❄️ “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment