வாழ்க வையகம்
வளர்க வேதாத்திரியம்
வாழ்க வளமுடன்
நித்தியக்கடன்
மே 16
🕳️🧊🕳️🧊🕳️🧊🕳️🧊🕳️🧊🕳️
🎉இன்றைய நித்தியக்கடன்
🎉 அதிகாலை எழுந்து நிதானமாக உடற்பயிற்சி, நிதானமாக காயகல்பம், நிதானமாக தவம் செய்வோம், இந்நாள் இனிய நாளாக.
🎉 இன்றைய சாதகம்
🎉 வியாழக்கிழமை
காலை:- தீபப்பயிற்சி, துரியதவம்,
மாலை:- இறைநிலைதவம்.
🎉 இன்றைய நற்சிந்தனை
🎉 நம்முடைய பிறப்புக்கு எது காரணமாக இருக்கிறதோ, அதுவே நம்முடைய இழப்புக்கும் காரணமாக இருக்கிறது. அதுமட்டுமின்றி நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அதுதான் நிர்ணயம் செய்கிறது. அதை தவிர்த்துவிட்டு நம்முடைய வாழ்க்கையை வாழவே முடியாது. ஒரு மரத்திற்கு ஆணிவேர் எப்படி அமைந்திருக்கிறதோ அது போல அமைந்திருக்கிறது. வாழ்க்கையின் வெற்றி, தோல்வி, வாழ்க்கை வளங்கள், உடலமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி, உடல் வலிவு, சுகம், செல்வம் இவை அனைத்தையும் அதுவே தீர்மானிக்கிறது.
🎉 இன்றைய தற்சோதனை
🎉 அனைத்துக்கும் ஒன்றே காரணமா? ஆம்! அந்த ஒன்றுதான் அனைத்துக்கும் மூல காரணம். அது நம்மோடு நாமாக நமக்குள்ளேயே இருக்கிறது. அதற்கு பெயர் வினைபதிவுகள். கருதொடர் வழியாக நமக்குள்ளே இருக்கக்கூடிய கர்மவினை பதிவுகள் இதுதான் அனைத்திற்கும் மூல காரணம். இந்த சிந்தனையை பல்வேறு வழிமுறைகளில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளுங்கள். தற்சோதனைக்கு உட்படுத்தி இதன் உட்பொருள் உண்மையை உணருங்கள்.
🎉 இன்றைய பண்புப்பயிற்சி
🎉 இவ்வாறான கர்மவினை பதிவுகளை நாம் சீர்திருத்தம் செய்துகொள்ள முடியும். நம்முடைய நன்னடத்தை, மேல்பதிவு இவைகளின் வழியாக மாற்றியமைக்கமுடியும். திட்டமிட்டு நல்ல பல பண்புகளை நாமாக விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டு நிறை, மனம், சகிப்புத்தன்மை, ஈகை, கற்பு, சமஉணர்வு, மன்னிப்பு இதன் வழியில் நம்முடைய எண்ணம், சொல், செயல் அனைத்தையும் அமைத்துக் கொள்ளும்போது கர்மவினை பதிவுகளின் தன்மை மாறுகிறது தரம் உயருகிறது. "வாழும் நிலை உணர்ந்து தொண்டாற்றி இன்பம் காண்போம்" வாழ்க வளமுடன்...
🎉 குறிப்பு:- இன்று அமாவாசை, பௌர்ணமி, மாதப்பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண நாள் தங்கள் பிறந்த நாளாக இருந்தாலோ காலை, மாலை இரண்டு வேளையும் பஞ்சபூத நவக்கிரக தவம் செய்யவும். இந்நித்தியக்கடனை கடைபிடிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் இப்பதிவு சமர்ப்பணம் நீங்கள் தெரிந்து கொண்ட தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
🎉 “யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்” இரவு உறங்குவதற்கு முன் சாந்தி தவம் கட்டாயம் செய்வோம் காலை எழுந்தவுடன் வாழ்க வையகம்! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்! என்று மூன்று முறை வாழ்த்துவோம் வாழ்வை நமதாக்கி வாழ்வோம் நாளையும் தொடரும்...
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
🌸வாழ்க வையகம்🌸
🍁வளர்க வேதாத்திரியம்🍁
🌸வாழ்க வளமுடன்🌸
☯🙏☯🙏☯🙏☯🙏☯🙏☯
Comments
Post a Comment